செருப்ப கழட்டி அடிச்ச மாதிரி இருக்கும்.! கோபப்பட்ட சூர்யா பட இயக்குனர்.!
சூர்யா நடிப்பில் வரும் மார்ச் மாதம் 10-ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் "எதற்கும் துணிந்தவன்" இத்திரைப்படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி உள்ளார். சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
பிரியங்கா மோகன், வினய், சத்யராஜ் என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். டி இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை பற்றி பேசும் படமாகவும் அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வை தரும் படமாகவும் இப்படம் இருக்கும் என கூறப்படுகிறது.
இப்படத்தைப் பற்றி இயக்குனர் பாண்டிராஜ் அண்மையில் பேசுகையில், இப்படம் நிச்சயம் பெண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் பார்க்க வேண்டிய படமாக இருக்கும், எப்படி பெண் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும், ஆண் குழந்தைகள் எப்படி வளரவேண்டும் என பல்வேறு விஷயங்களில் பேசப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்டார்.
மேலும், அவர் பேசுகையில் முன்னாள் உணர்ச்சி மிகுதியில் பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கும் அவர்கள் குடும்பத்திற்கும் இந்த திரைப்படத்தின் வசனங்கள் செருப்பை கழட்டி அடித்தது போல இருக்கும் என மிகவும் காட்டமாக பேசியிருந்தார். உண்மையில், இதேபோல் சாட்டையடி வசனங்கள் படத்தில் நிறைய இருக்கும் என அவர் கூறினார்.
நிச்சயம் இந்த திரைப்படம் தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியாவில் ஓர் பேசி பொருளாகவும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராகவும் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. விரைவில் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்களேன்- கண்ணம்மா சீரியலை கண்டு ஓட்டம் பிடிக்கும் முக்கிய பிரபலங்கள்.! இதோடு 3வது ஆள்.!
ஏற்கனவே, இந்த படத்தில் இருந்து 3 பாடல்கள் வெளியான நிலையில் அடுத்ததாக இப்படத்தின் டீசர் டிரைலர் ஆகியவை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்த அப்டேட்களை சன் பிக்சர்ஸ் வெளியிட தயாராக இருக்கிறது,