இப்படி பாத்தா உன்கூடவே வந்துடுவோம்!.. லுக்காலே கிக்கு ஏத்தும் குட்டி நயன்தாரா..
Anikha surendiran: சில நடிகைகள் முதல் படத்திலேயே கதாநாயகியாக அறிமுகவார்கள். சில நடிகைகள் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்க துவங்கி பல படங்களில் நடித்துவிட்டு டீன் ஏஜை எட்டியவுடன் கதாநாயகியாக நடிக்க துவங்குவார்கள். இதில், அனிகா சுரேந்திரன் இரண்டாவது வகை.
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கினார். மம்முட்டி உள்ளிட்ட சில ஹீரோக்களுக்கு மகளாக நடித்திருக்கிறார். கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, திரிஷா, அருண் விஜய் ஆகியோர் நடித்த என்னை அறிந்தால் படத்தில் திரிஷாவின் மகளாக நடித்து கோலிவுட் ரசிகர்களிடம் அறிமுகமானார்.
அதன்பின் சிவா இயக்கத்தில் அஜித் - நயன்தாரா நடித்த விஸ்வாசம் படத்திலும் மகளாக நடித்திருந்தார். இந்த படத்தில் நடிக்க வாய்ப்புள்ள சிறுமி கதாபாத்திரம் அவருக்கு கிடைத்தது. அவரும் திறமையான நடிப்பால் செண்டிமெண்ட் காட்சிகளில் சிறப்பாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
அதன்பின் மாமனிதன் உள்ளிட்ட சில படங்களில் சிறுமியாக நடித்தார். திடீரெனெ கவர்ச்சி உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களையும், நெட்டிசன்களையும் அதிர வைத்தார். அப்போதுதான் டீன் ஏஜை எட்டிவிட்ட அனிகா கதாநாயகியாக நடிக்க ஆசைப்படுகிறார் என்பது எல்லோருக்கும் புரிந்தது.
ஒருவழியாக ஓ மை டார்லிங் என்கிற படத்தில் ஹீரோயினாக நடித்தார். முதல் படத்திலேயே உதட்டோடு உதடு முத்தம் கொடுத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். ஒருபக்கம், தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் கொஞ்சம் கிளுகிளுப்பாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் பலரையும் சூடேற்றி வருகிறது.