இப்படி தளதளன்னு வளர்ந்துட்டியே செல்லம்!.. விஸ்வாசம் பட சிறுமியா இது?!.. வைரல் பிக்ஸ்!..
Anikha surendiran: கேரளாவை சேர்ந்தவர் அனிகா சுரேந்திரன். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சில மலையாள படங்களில் நடித்தார். கவுதம் மேனன் கண்ணில் பட்டதால் என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். இந்த படத்தில் திரிஷாவின் மகளாகவும், அஜித்தின் வளர்ப்பு மகளாகவும் நடித்திருந்தார்.
இந்த படம் பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும் அனிகாவுக்கு தமிழில் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று கொடுத்தது. நானும் ரவுடிதான் படத்தில் குட்டி நயன்தாராவாகவும் நடித்தார். ஜெயம் ரவியின் தங்கையாக மிருதன் படத்தில் நடித்தார். அடுத்து அஜித் - நயன்தாரா ஜோடிக்கு மகளாக நடித்திருந்தார்.
இந்த படத்தில் இடம் பெற்ற கண்ணான கண்ணே பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது. அந்த பாடலுக்கு இசையமைப்பாளர் இமானுக்கு தேசிய விருதையும் பெற்று தந்தது. இந்த படத்தில் அனிகாவுக்கு தனது நடிப்பு திறமையை காட்ட பல காட்சிகள் இடம் பெற்றிருந்தது.
எல்லாவற்றிலும் ஸ்கோர் செய்தார் அனிகா. அதன்பின் மாமனிதன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஒருகட்டத்தில் டீன் ஏஜை எட்டிய அனிகாவுக்கு கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது. தெலுங்கு படமொன்றில் கதாநாயகியாக நடித்தார். முதல் படத்திலேயே முத்தக்காட்சியில் நடித்து அதிர வைத்தார்.
இனிமேல் அவர் சிறுமியாக நடிக்க மாட்டார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஒருபக்கம், மற்ற நடிகைகளை போல கவர்ச்சியாக டிரெஸ் அணிந்து அழகை காட்டி போட்டோக்களையும் வெளியிட துவங்கிவிட்டார். அந்தவகையில், புடவையில் அழகை காட்டி அனிகா வெளியிட்டுள்ள போட்டோக்கள் இளசுகளை கிறங்க வைத்திருக்கிறது.