ஐயோ இது வேற லெவல் போ!. சில்க் ஸ்மிதா ரேஞ்சுக்கு மாறிய அனிகா சுரேந்திரன்...
எல்லா மொழி படங்களிலும் குழந்தை நட்சத்திரங்கள் இருப்பார்கள். சிறுமியாக பல படங்களில் நடிக்கும் அவர்கள் ஒருகட்டத்தில் டீன் ஏஜை எட்டியதும் கதாநாயகியாக நடிக்க துவங்குவார்கள். இந்த வரிசையில் வருபவர்தான் அனிகா சுரேந்திரன். கேரளாவை சேர்ந்த இவர் பல மலையாள படங்களிலும் சிறுமியாக நடித்திருக்கிறார்.
கவுதம் மேனன் கண்ணில் படவே என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் வளர்ப்பு மகளாக நடிக்க வைத்தார். இந்த படத்தில் அவருக்கும் அஜித்தும் இருக்கும் ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ பாடல் நல்ல மெலடியாக அமைந்தது. அதன்பின் நானும் ரவுடிதான் படத்தில் சிறு வயது நயன்தாராவாக நடித்தார்.
மிருதன் படத்தில் ஜெயம் ரவியின் தங்கையாக நடித்தார். ஆனால், விஸ்வாசம் படத்தில் அஜித் - நயன்தாரா ஜோடிக்கு மகளாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இந்த படத்தில் அவரின் நடிப்பு திறமையை காட்டும் பல காட்சிகள் இடம் பெற்றிருந்தது. மேலும், கண்ணான கண்ணே பாடல் ரசிகர்களை மிகவும் கவர்ந்து ஹிட் அடித்தது.
அதன்பின் டீன் ஏஜை எட்டிய அனிகா ஓ மை டார்லிங் என்கிற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த படத்தில் லிப்லாக் காட்சியில் துணிச்சலாக நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்து வரும் நடிகையாக அனிகா மாறிவிட்டார்.
தனுஷின் 50வது படத்திலும் அனிகா நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஒருபக்கம், இப்போதெல்லாம் கவர்ச்சி நடிகைகள் போல கிளுகிளுப்பான உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சொக்க வைத்து வருகிறார். இந்நிலையில், சிலுக்கு ஸ்மிதா ரேஞ்சுக்கு உடையணிந்து போஸ் கொடுத்து அனிகா புதிய புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.