நல்லா தளதளன்னு வளர்ந்திருக்க செல்லம்!.. விஸ்வாசம் நடிகையை கொஞ்சம் ரசிகர்கள்...

சிறுமியாக இருக்கும் போதிலிருந்தே மலையாள திரைப்படங்களில் நடித்து வருபவர் அனிகா சுரேந்திரன். குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருக்கிறார். கவுதம் மேனனுடன் இணைந்து அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் திரிஷாவின் மகளாக நடித்திருந்தார்.
திரிஷா இறந்துவிடுவது போலவும் அவரின் குழந்தையை அஜித் வளர்ப்பது போலவும் காட்சிகள் காட்டப்பட்டிருக்கும். இவருக்கும் அஜித்துக்கும் இடையே உள்ள அன்பை காட்டும் ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ பாடல் ரசிகர்களை கவர்ந்தது. நானும் ரவுடிதான் படத்தில் சிறு வயது நயன்தாராவாக நடித்திருந்தார்.
மிருதன் படத்தில் ஜெயம் ரவியின் சகோதரியாக நடித்திருந்தார். அதன்பின் மலையாள சினிமா பக்கம் சென்ற அனிகா மீண்டும் அஜித் - நயன்தாரா நடித்த விஸ்வாசம் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் திரைக்கதை அவரை சுற்றி நடப்பது போலவே அமைக்கப்பட்டிருந்தது.
எனவே, பல காட்சிகளில் நன்றாக நடிக்கும் வாய்ப்பு அனிகாவுக்கு கிடைத்தது. அதன்பின் விஜய் சேதுபதி நடித்த மாமனிதன் படத்தில் நடித்தார். அதன்பின் டீன் ஏஜை எட்டிய அனிகா தெலுங்கு சினிமா பக்கம் சென்று கதாநாயகியாக நடித்தார். ஓ மை டார்லிங் என்கிற தலைப்பில் வெளியான அந்த படத்தில் முத்தக்காட்சிகளிலும் துணிந்து நடித்து ரசிகர்களை அதிரவிட்டார்.
மலையாளம், தமிழ், தெலுங்கு என எங்கு வாய்ப்பு கிடைத்தாலும் நடித்து வருகிறார். மேலும், அவ்வப்போது கட்டழகை சிக்கென காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், கேரள ஸ்டைல் புடவையை அணிந்து போஸ் கொடுத்து அனிகா வெளியிட்டுள்ளார்.