கண்ட்ரோல் பண்ணாலும் கண்ணு அங்கதான் போகுது!.. அழகை காட்டி இழுக்கும் அஜித் ரீல் மகள்!…

Published on: October 13, 2023
---Advertisement---

Anikha surendiran: கேரளாவை சேர்ந்த அனிகாவுக்கு சிறு வயது முதலே நடிப்பின் மீது அதிக ஆசை. எனவே, மலையாள திரைப்படங்களில் சிறுமியாக நடித்தார். மம்முட்டியின் மகளாக கூட நடித்திருக்கிறார். இயக்குனர் கவுதம் மேனன் கண்ணில் படவே அவர் இயக்கிய என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் மகளாக நடிக்க வைத்தார்.

anikha

 

அதன்பின் மீண்டும் விஸ்வாசம் படத்தில் அஜித் – நயன்தாரா ஜோடிக்கு மகளாக நடித்திருந்தார். இந்த படத்தில் இவருக்கு அதிக காட்சிகளும், அழுத்தமான கதாபாத்திரமும் கிடைத்தது. அனிகாவும் அந்த காட்சிகளில் மிகவும் சிறப்பாக நடித்திருந்தார். இந்த படத்தால் தமிழில் அவருக்கு ரசிகர்களும் உருவானார்கள்.

anikha

தமிழ், மலையாளம் என மாறி மாறி சிறுமியாக நடித்தார். விஜய் சேதுபதி நடித்து மாமனிதன் படத்திலும் நடித்திருந்தார். ஆனால், இப்போது டீன் ஏஜை எட்டிவிட்ட அனிகாவுக்கு கதாநாயகியாக நடிக்கும் ஆசை வந்துவிட்டது. எனவே, கவர்ச்சி உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

anikha

இதன் மூலம் தெலுங்கில் ஓ மை டார்லிங் என்கிற படத்தில் நடிக்க வாய்ப்பும் கிடைத்தது. முதன் முதலாக கதாநாயகி வாய்ப்பு கிடைத்த சந்தோஷத்தில் லிப்-லாக் காட்சிகளிலெல்லாம் நடித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். ஆனாலும், தொடர்ந்து கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு அவரை தேடிவரவில்லை.

anikha

ஆனாலும், தனது புகைப்படங்களை தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வாய்ப்பு தேடி வருகிறார். அந்த வகையில், கவர்ச்சி நடிகை போல் உடையணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

anikha

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.