Entertainment News
அப்படி பாக்குறதுன்னா வேணாம்!. குட்டி நயன்தாராவை பார்த்து கூல் சுரேஷ் ஆன ரசிகர்கள்!..
Anikha surendiran: மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கியவர் அனிகா சுரேந்திரன். அப்படியே ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவுக்கும் வந்தார். கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் – திரிஷா நடித்த என்னை அறிந்தால் படத்தில் திரிஷாவின் மகளாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார்.
அதன்பின் மீண்டும் அஜித் – நயன்தாரா நடிப்பில் உருவான விஸ்வாசம் படத்திலும் நடித்திருந்தார். இந்த படத்தின் திரைக்கதையே அவரை சுற்றி நடப்பது போல அமைக்கப்பட்டிருந்தது. எனவே, அனிகாவுக்கு நிறைய காட்சிகள் இருந்தது. அதிலெல்லாம் சிறப்பாக நடித்து ஸ்கோர் செய்தார்.
இதையும் படிங்க: சிறகடிக்க ஆசை: ரவியை கத்திவிட்டு செல்லும் ஸ்ருதி… விஜயாவிடம் மாட்டிக்கொண்டு முழிக்கும் ரோகிணி…!
குறிப்பாக கிளைமேக்ஸ் காட்சியில் அவர் காட்டிய நடிப்பு ரசிகர்களுக்கு கண்ணீரை வரவழைத்தது. அதன்பின் மாமனிதன் உட்பட சில திரைப்படங்களில் சிறுமியாகவே நடித்தார். ஒருகட்டத்தில் டீன் ஏஜை எட்டிய அனிகா கொஞ்சம் கவர்ச்சியான உடைகளை அணிந்து அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
இதையும் படிங்க: இடுப்பு மடிப்ப பாத்தே ஏங்கி போனோம்!.. கேப்பு உடாம போட்டு பொளக்கும் திவ்யா துரைசாமி!…
மேலும், ஒரு தெலுங்கு படத்தில் கதாநாயாகிவும் நடித்தார். அதோடு, அந்த படத்தில் லிப்லாக் காட்சியிலும் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார். இனிமேல் இவரை கதாநாயகியாக மட்டுமே பார்க்க முடியும் என கணிக்கப்படுகிறது. எப்படியாது ஹீரோயின் வாய்ப்பை பெற சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், பச்சை நிற லாங் கவுன் அணிந்து கிக் ஏத்தும் லுக்கில் போஸ் கொடுத்து அனிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.