Connect with us

Cinema News

குட்டி நயன்தாராவா கூட்டியாந்து கோபத்தை தீர்த்துக்கிட்ட தனுஷ்!.. அனிகாவுக்கு அழ கூட தெரியலையே!..

நடிகர் தனுஷ் இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் பிப்ரவரி 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மோசமான விமர்சனங்களை அள்ளியது. இதில், பவிஷ் நாராயண், மேத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் இசையில் வெளியான இந்த படம் பாக்ஸ் ஆபிஸீல் தோல்வி அடைந்தது. அதே நாளில் வெளியான டிராகன் திரைப்படம் 150 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டியது.

இந்நிலையில், நேற்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை பலரும் பார்த்து கலாய்த்து வருகின்றனர். சினிமாவில் பல திறமையான நடிகர்களுக்கு வாய்ப்பே கிடைப்பதில்லை ஆனால் நடிக்க தெறியாமலேயே நடிகர்களின் மகனோ அல்லது மகளையோ எளிதாக சினிமாக்குள் கொண்டுவந்துவிடுகின்றனர்.

#image_title

நடிகர் தனுஷ் தனது அக்கா மகனை முதல் படத்திலேயே ஹீரோவாக்கிவிட்டார். இங்கு திறமையானவர்களே திணரும்போது ஹீரோ பவிஷுக்கு நெகட்டிவான கமெண்டுகள் குவிந்து வருகிறது. இயக்குநர் கௌதம் மேனன் இயக்கி நடிகர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் அனிகா சுரேந்திரன். அதை தொடர்ந்து தற்போது தனுஷ் இயக்கத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். எந்த படத்திலும் கதாநாயகியை இன்ட்ரோ பண்ண முடியாத அளவுக்கு இருந்தது அனிகாவின் அந்த சோத்து மூட்டை அறிமுகக்காட்சி.

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் பிப்ரவரி மாதம் டிராகன் படத்துடன் ரீலிசானது. நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்திற்கு கிடைத்த வரவேற்பை விட டிராகன் படத்திற்கு கிடைத்த வரவேற்பு அதிகம். மேலும், நேற்று அமேசான் பிரைமில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படமும் நெட்பிளிக்ஸில் டிராகன் படமும் ஓடிடியிலும் ஒரே நாளில் மோத நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மீண்டும் அடி வாங்கி வருகிறது.


நடிக்கவே தெரியாத ரெண்டு பேரை வைத்து தண்டத்துக்கு கோடிக்கணக்கில் செலவு செய்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்றால் அதுக்கு தனுஷ் எடுத்த இந்த படம் தான் எக்ஸாம்பிள் என்றும் நயன்தாரா மேல இருக்க காண்ட குட்டி நயன்தாரா மீது தனுஷ் காட்டிட்டாரா என்றும் கலாய்த்து வருகின்றனர்.

 

google news
Continue Reading

More in Cinema News

To Top