மாட்டிக்கினாரு ஒருத்தரு!.. அனிமல் பட இயக்குநர் பெண்களை அடிக்காமல் இருக்க முடியாதாம்.. வைரலாகும் வீடியோ!

Published on: November 26, 2023
---Advertisement---

அர்ஜுன் ரெட்டி படத்திலேயே பெண்களை படுமோசமாக காட்டி ஆணாதிக்கத்தின் உச்சத்தை காட்டியிருப்பார் சந்தீப் ரெட்டி வங்கா. அடுத்து வரும் டிசம்பர் 1ம் தேதி வெளியாக உள்ள அனிமல் படத்திலும் ராஷ்மிகா மந்தனா கழுத்தை பிடிப்பது, கிஸ் அடிப்பது என எல்லை மீறி நடித்துள்ளார்.

இந்நிலையில், முன்னதாக அவர் அளித்த த்ரோபேக் பேட்டியில் நமக்கு பிடித்த பெண்ணை அடிக்காமல் இருப்பதில் எந்தவொரு எமோஷனும் இல்லை என பேசிய வீடியோவை நெட்டிசன்கள் தற்போது வைரலாக்கி சந்தீப் ரெட்டி வங்கா உண்மையாவே  ஒரு அனிமல் தான் என்றும் அவரது படத்தை புறக்கணிக்க வேண்டும் என்றும் தற்போது எதிர்ப்புகள் குவிந்து வருகின்றன.

இதையும் படிங்க: பருத்திவீரன் படத்துக்கு நீங்களா தயாரிப்பாளர்?.. ஞானவேல் ராஜாவின் நாக்கை பிடுங்கிய சமுத்திரகனி!..

பாலிவுட்டில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி உள்ள அனிமல் படம் விரைவில் வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான டிரெய்லரை பார்த்த ரசிகர்கள் வழக்கம் போல பெண்களை அடக்கி ஆள ஆரம்பித்து விட்டார் சந்தீப் ரெட்டி வங்கா என நெகட்டிவிட்டியை பரப்ப ஆரம்பித்து விட்டனர்.

நமக்கான பெண்கள் என்றால் அவர்களை அடிக்காமலோ, விருப்பப்படும் இடத்தில் தொடாமலோ, அசிங்கமாக பேசாமலோ, முத்தம் கொடுக்காமலோ இருக்க முடியாது என்றும் அப்படி வாழ்ந்தால் எந்தவொரு உணர்வும் இருவருக்குள்ளும் இருக்காது என வெறிபிடித்தவர் போல சந்தீப் ரெட்டி வங்கா பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: நிக்சனையே காஜின்னு சொன்னாங்க!.. இந்தி பிக் பாஸ்ல இப்படி பாயுறானே.. இங்கேயும் விரைவில் எதிர்பார்க்கலாமோ?..

ஆனால், அவர் இயக்கிய அர்ஜுன் ரெட்டி படத்தை தான் ஒட்டுமொத்த இளைஞர்களும் கொண்டாடினர். டிசம்பர் 1ம் தேதி வெளியாக உள்ள அனிமல் படத்தையும் பார்க்க ரசிகர்கள் ரெடியாகி வருகின்றனர்.

https://twitter.com/Selfmade_steel/status/1728256516535509117

 

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.