கேப்பு விடாம லிப்கிஸ் அடிக்கும் ராஷ்மிகா மந்தனா!.. ஆலியா பட் புருஷுனுக்கு செம மச்சம்தான்(வீடியோ)..!..

by சிவா |
rashmika
X

Rashmika mandana: கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் ராஷ்மிகா மந்தனா. ஆனால், தெலுங்கு சினிமாவில் நுழைந்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். விஜய தேவரகொண்டாவுடன் இவர் நடித்த கீதா கோவிந்தம் உள்ளிட்ட சில படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று ராஷ்மிகா அதிகம் பிரபலமானார்.

அதன்பின் தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவான புஷ்பா படத்திலும் அவருக்கு ஜோடியாக் நடித்து பேன் இண்டியா அளவில் பிரபலமானார். தமிழில் கார்த்தி நடித்த சுல்தான் படத்திலும், விஜய் நடித்த வாரிசு படத்திலும் நடித்திருந்தார்.

இதையும் படிங்க: அஜித்திடம் அந்த மாதிரி விஷயம்லாம் அனுமதியே இல்லையாம்! இப்படியும் ஒரு நடிகரா? சர்டிஃபிக்கேட் கொடுத்த தங்கத்தலைவி

இவருக்கென ஒரு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. தற்போது பாலிவுட் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். அமிதாப்பச்சனுடன் குட்பை என்கிற படத்தில் நடித்தார். இப்போது ஆலியா பட்டின் கணவுரும், நடிகருமான ரன்பீர் கபூருடன் இணைந்து அனிமல் என்கிற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் பாடல் வீடியோ இப்போது வெளியாகியிருக்கிறது. இதில், ரன்பீர் கபூரும், ராஷ்மிகா மந்தனாவும் விமானம் ஓட்டியபடியே ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக இருவரும் லிப்லாப் அடித்து கொள்ளும் காட்சிகள் நிறைய வருகிறது. இதைப்பார்க்க்கும்போது தெலுங்கு நடிகர்களுக்கும், தமிழ் சினிமா நடிகர்களுக்கும் வயிறு எரியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இதையும் படிங்க: வேலியில போற ஓணான இழுத்து வேட்டிக்குள்ள விட்ட கதையால இருக்கு… சும்மா இருந்த நெக்சனை வம்புக்கு இழுத்த பிரதீப்!…

நடிகர்களோடு லிப்லாப் காட்சியில் ராஷ்மிகா மந்தனா நடிப்பது இது முதன் முறையில்லை. தெலுங்கு நடிகர்கள் விஜய தேவரகொண்டா, நித்தின் உள்ளிட்ட சில நடிகர்களுடன் முத்தக்காட்சியில் ராஷ்மிகா நடித்திருக்கிறார். தெலுங்கு நடிகர்களுடனே நடிக்கும்போது பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருடன் நடித்தால் என்ன என நினைத்து விட்டார் போலும்.

இந்த படமும் தமிழில் டப் செய்யப்படவுள்ளது. நீ வாடி என்கிற தலைப்பில் இந்த பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களையும், வீடியோக்களையும் ரசிகர்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Next Story