பத்திரிக்கையாளரை பிளான் போட்டு கடத்திய விஜய் படக்குழுவினர்… தயாரிப்பாளரின் வீட்டுக்கு பறந்து வந்த நோட்டீஸ்… சிக்கலில் “வாரிசு”…
இந்தியாவில் சினிமாக்களில் விலங்குகளை பயன்படுத்த வேண்டும் என்றால், விலங்கு நல வாரியத்திடம் இருந்து அனுமதி பெறவேண்டும் என்பது வரைமுறை. அப்படி அவர்கள் அனுமதி கொடுக்க மறுத்துவிட்டால் விலங்குகளை பயன்படுத்த முடியாது.
ஆனால் சில நேரங்களில் விலங்கு நல வாரியத்திடமிருந்து அனுமதி வாங்குவது கடினம். ஆதலால் சில தயாரிப்பாளர்கள் அதிக செலவு செய்து கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அக்காட்சியை உருவாக்குவார்கள், அல்லது வெளிநாடு சென்று படமாக்குவார்கள். ஒரு வேளை இந்த விதிமுறைகளை எல்லாம் மீறி செயல்பட்டால் அந்த சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் பாயும். அப்படிப்பட்ட ஒரு சம்பவம்தான் “வாரிசு” படத்தின் தயாரிப்பாளருக்கும் நடந்திருக்கிறது.
வாரிசு
விஜய் நடிப்பில் உருவாகி வரும் “வாரிசு” திரைப்படத்தை வம்சி பைடிப்பள்ளி இயக்கி வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் பிரகாஷ் ராஜ், குஷ்பு, சரத்குமார், ஷாம், சங்கீதா, யோகி பாபு ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இத்திரைப்படத்திற்கு எஸ்.தமன் இசையமைத்துள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் சார்பாக தில் ராஜூ இத்திரைப்படத்தை தயாரித்து வருகிறார்.
பொங்கலுக்கு ரிலீஸ்
“வாரிசு” திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியாக உள்ளது. அஜித்தின் “துணிவு” திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாக உள்ளதால் கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் கழித்து அஜித்-விஜய் திரைப்படங்கள் ஒரே நாளில் மோத உள்ளன. ஆதலால் ரசிகர்கள் மிகவும் வெறித்தனமாக காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இதையும் படிங்க: “நானும் ஹீரோயினோட டான்ஸ் ஆடுவேன்”… இயக்குனரிடம் அடம்பிடித்த கவுண்டமணி…
பத்திரிக்கையாளர் கடத்தல்
இந்த நிலையில் “வாரிசு” திரைப்படத்தின் படப்பிடிப்பை நோட்டமிடச் சென்ற பத்திரிக்கையாளரை விஜய் படக்குழுவினர் கடத்தியதாக பரவிய தகவல் சினிமா வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
“வாரிசு” திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளதால் பொங்கல் பண்டிகை இடம்பெறுவது போல் ஒரு பாடல் காட்சியை எடுக்க படக்குழு திட்டமிட்டிருந்ததாம். ஆதலால் குதிரை, யானை, மாடு போன்ற விலங்குகளை அந்த பாடல் காட்சியில் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் படக்குழுவினர் விலங்கு நல வாரியத்திடமிருந்து அனுமதி வாங்கவில்லை.
இதனை குறித்து கேள்விப்பட்ட ஒரு பத்திரிக்கையாளர் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு சற்று தொலைவில் யாருக்கும் தெரியாமல் நின்றுகொண்டு பறக்கும் ட்ரோன் கேமராவை அனுப்பி படப்பிடிப்பை நோட்டமிட்டுக்கொண்டிருந்தாராம்.
படப்பிடிப்பு தளத்தில் பறக்கும் ட்ரோன் கேமராவை பார்த்த படக்குவினர், வேறொரு ட்ரோன் கேமராவை அனுப்பி அந்த பத்திரிக்கையாளரை கண்டுபிடித்துவிட்டனராம். உடனே சிலர் அந்த பத்திரிக்கையாளரை ஒரு காருக்குள் ஏற்றிக்கொண்டு போய்விட்டனராம்.
தயாரிப்பாளருக்கு நோட்டீஸ்
இந்த நிலையில் “வாரிசு” படக்குழுவினர் அனுமதி பெறாமல் விலங்குகளை வைத்து படப்பிடிப்பு நடத்திய நிலையில், விலங்கு நல வாரியம் தயாரிப்பாளர் தில் ராஜுவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாம். இதனால் அந்த பாடல் காட்சி திரைப்படத்தில் இடம்பெறுமா? என்று கேள்வி எழுந்துள்ளது.