சமீபத்தில் வெளியான பெரும்பாலான பெரிய திரைப்படங்கள் அனைத்தையும் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தான் தமிழகத்தில் தியேட்டர் உரிமையை வாங்கி வெளியிட்டு வருகிறது.
அப்படித்தான் கடந்த வாரம் ரிலீசான உலகநாயகனின் விக்ரம் திரைப்படத்தையும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கி பிரம்மாண்டமாக வெளியிட்டது. தற்போது அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்து வருகிறது.
முதலில் கமல் , விக்ரம் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினிடம் கொடுக்க பேச்சுவார்த்தை நடத்தினாராம் . உதயநிதி ஸ்டாலின் ஏதோ அதற்கு முழுதாக சம்பாதிக்காமல் சரி என்று சொல்லிவிட்டு வந்து விட்டாராம்.
இந்த விஷயம் அறிந்த அனிருத் உடனடியாக உதயநிதி ஸ்டாலினுக்கு போன் செய்து நான் தான் இந்த படத்திற்கு பின்னணி இசை பணிகளை செய்து வருகிறேன். படம் மிக பிரமாதமாக வந்துள்ளது என கூறினாராம் .
இதையும் படியுங்களேன் – ஒரே ஒரு படம் தான்.. தளபதி66 தயாரிப்பாளரை மிரள வைத்த சூர்யா.! ஃபாலோ செய்யும் தில் ராஜு.!
‘அதனால், தைரியமாக நீங்கள் இந்த படத்தை வாங்கலாம். ‘ என்று உதயநிதி ஸ்டாலினுக்கு அனிருத் செய்துள்ளார். அதன் பிறகு உதயநிதி ஸ்டாலின் ஓகே சொல்லி தமிழக வெளியீட்டு உரிமையை வாங்கிவிட்டாராம்.
தற்போது விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை நாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை. திரையிட்ட அனைத்து இடங்களிலும் பலத்த வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகார்த்திகேயனைப் பொருத்த…
கங்குவா படத்தின்…
தனுஷ், நயன்தாரா…
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…