அனிருத் ஹீரோவா நடிக்க வேண்டிய படம் இது…  இப்படி எல்லாம் நடந்திருக்கா??

Published on: October 22, 2022
Anirudh
---Advertisement---

தமிழ் சினிமா இசையுலகில் ராக்ஸ்டாரக வலம் வருபவர் அனிருத். அனிருத் இசையமைத்த முதல் திரைப்படமான “3” திரைப்படத்தின் ஆல்பம் வேற லெவலில் ஹிட் அடித்தது. குறிப்பாக “வொய் திஸ் கொலவெறி” பாடல் உலகம் முழுவதும் டிரெண்டங்க் ஆனது. இவ்வாறு தனது முதல் திரைப்படத்திலேயே தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக்கொண்டார் அனிருத்.

இவ்வாறு தமிழ் இசையுலகின் ராக்ஸ்டாராக மாறிப்போன அனிருத், ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடிப்பதற்காக கதை கேட்டார் என்றால், உங்களால் நம்பமுடிகிறதா?

Anirudh
Anirudh

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, ஆர்.ஜே.பாலாஜி ஆகியோரின் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி குறிப்பிடத்தக்க வெற்றியாய் அமைந்த திரைப்படம் “நானும் ரவுடிதான்”. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

Naanum Rowdy Dhaan
Naanum Rowdy Dhaan

இத்திரைப்படத்தின் கதையை முதலில் விஜய் சேதுபதியிடம் கூறினார் விக்னேஷ் சிவன். ஆனால் விஜய் சேதுபதி இந்த கதையில் தன்னால் நடிக்க முடியாது என கூறிவிட்டார். அதன் பின் இந்த கதையை அனிருத்திடம் கூறினாராம் விக்னேஷ் சிவன். மேலும் அனிருத் நடிப்பதற்காக கதையில் சில மாறுதல்களும் செய்தாராம். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் அனிருத், தன்னால் நடிக்க முடியாது என கூறிவிட்டாராம்.

அதன் பின்பு மிர்ச்சி சிவாவிடம் இந்த கதை சென்றிருக்கிறது. அவரும் பச்சைக்கொடி காட்டவில்லை. அதன் பின்புதான் விஜய் சேதுபதியிடம் மீண்டும் இந்த கதையை எடுத்துக்கொண்டு போனார் விக்னேஷ் சிவன். அதனை தொடர்ந்துதான் விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம்.

Anirudh and Vignesh shivan
Anirudh and Vignesh shivan

“நானும் ரவுடிதான்” திரைப்படத்திற்காக அனிருத்திடமும் விக்னேஷ் சிவன் கதை கூறியிருக்கிறார் என்பதை அறியும்போது சற்று வியப்பாகத்தான் இருக்கிறது.

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.