எவ்வளவு காசு கொடுத்தாலும் இந்த விஷயத்தை செய்ய மாட்டேன்..- வந்த வாய்ப்புகளை மறுத்த அனிருத்..!
இவர் ஒரு படத்துக்கு மியூசிக் போட்டாலே அந்த படத்தில் பாடல் ஹிட் என கூறும் அளவிற்கு தமிழ் சினிமாவில் ஹிட் பாடல்களாக கொடுத்து வரும் இசையமைப்பாளராக இசையமைப்பாளர் அனிருத் இருக்கிறார்.
அனிருத் இசையமைக்கும் பாடல்கள் ஹிட் அடிப்பதாலேயே பெரிய பெரிய ஹீரோக்கள் கூட அனிருத் தங்களது திரைப்படத்தில் இசையமைக்க வேண்டும் என விருப்பம் தெரிவிக்கின்றனர். தற்சமயம் நெல்சன் இயக்கும் ஜெயிலர் திரைப்படத்திற்கும் அனிருத்தான் இசையமைத்து வருகிறார்.
2 கே கிட்ஸ் மத்தியில் அனிருத் மிகவும் பிரபலமாக இருக்கிறார். ஆரம்பக்கட்டத்தில் நடிகர் தனுஷ் இவருக்கு நிறைய வாய்ப்புகளை பெற்று தந்துள்ளார். ஆனால் தற்சமயம் தனுஷ்க்கும் அனிருத்க்கும் இடையே சுமூகமான உறவு இல்லை என கூறப்படுகிறது.
அனிருத் இசையமைப்பது போல அவர் பாடும் பாடல்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. அந்த அளவிற்கு சிறப்பான குரல்வளம் கொண்டுள்ளார் அனிருத். ஆனால் பாடல் பாடுவதில் மட்டும் சில விதிமுறைகளை வைத்துள்ளார் அனிருத்.
அனிருத் பின்பற்றும் விதிமுறை:
அதாவது அவர் பாடும் பாடல்களை பொருத்தவரை அந்த பாடலின் இசை அவருக்கு பிடித்திருக்க வேண்டும். ஏனெனில் வேறு இசையமைப்பாளர்கள் இசையமைக்கும் பாடல்களுக்கும் அனிருத் பாடல் பாடுவதுண்டு. ஒரு பாடலின் இசை அனிருத்திற்கு பிடிக்கவில்லை எனில் எவ்வளவு காசு கொடுத்தாலும் அந்த பாடலை பாட மாட்டார்.
அதே சமயம் ஒரு பாடல் தனக்கு பிடித்துள்ளது எனில் காசே வாங்காமல் கூட அந்த பாடலை பாடி கொடுப்பாராம். இந்த காரணத்தாலேயே தனக்கு பாடுவதற்கு வந்த பல வாய்ப்புகளை நிராகரித்துள்ளார் அனிருத்.