அய்யோ நானா? அந்த விஷயத்தை செய்ய தயங்கிய அனிருத்!.. கடைசியில் என்ன நடந்தது?

by Akhilan |   ( Updated:2024-08-19 07:45:49  )
அய்யோ நானா? அந்த விஷயத்தை செய்ய தயங்கிய அனிருத்!.. கடைசியில் என்ன நடந்தது?
X

Anirudh: பொதுவாக தமிழ் சினிமா இசையமைப்பாளர்களிடம் ஒரு நம்பிக்கை இருக்கும். அது மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் பாடக்கூடாது என்பதை பலர் கொள்கையாகவே வைத்திருப்பார்கள். அந்த வரிசையில் வித்தியாசமான கொள்கையைக் கடைபிடிப்பவர்தான் ராக் ஸ்டார் அனிருத்.

கல்லூரி இரண்டாமாண்டு படிக்கையிலேயே 3 படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத்தின் குரல் தனித்துவமானது. அவர் பாடிய பெரும்பாலான பாடல்கள் ஹிட் லிஸ்டில் முக்கியமான இடம்பிடித்தவை. அதுவும் குறிப்பாக அவர் மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் பாடுகையில் அந்தப் பாடலுக்கான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருக்கும்.

இதையும் படிங்க: 350 கோடி பட்ஜெட்டு!. பாத்து பண்ணுயா!.. கங்குவாவை புலம்பவிட்ட வேட்டையன்!…

இப்படி மற்ற இசையமைப்பாளர்கள் இசையில் பாடுகிறீர்களே என்று அவரிடம் கேட்டபோது, அவர் சொன்ன பதில் சுவாரஸ்யமானது. அதிலும் குறிப்பாக மிகப்பெரிய இசையமைப்பாளரோ அல்லது புதிய இசையமைப்பாளரோ, யாருடைய இசையில் அவர் பாடினாலும் அதற்கு சம்பளமாக ஒரு ரூபாய் கூட பெறுவது கிடையாது அனிருத். இதை ஒரு பாலிஸியாகவே வைத்திருக்கிறார்.

ஏன் அடுத்தவர்கள் இசையில் பாடுகிறீர்கள் என்கிற கேள்விக்கு, 'மத்தவங்க மியூசிக்ல அடிக்கடி பாடினா உங்க எக்ஸ்க்ளூசிவிட்டி போயிடும்’னு சொல்லுவாங்க. ஆனா நான் பாடுறதுக்காக இங்க வரலையே. மியூசிக் டைரக்ட்ரா ஆகணும்னு வந்தேன். ஆகிட்டேன். நான் பாடுவது மூலம் அந்தப் படத்துக்கோ பாட்டுக்கோ எக்ஸ்ட்ரா ஃபூஸ்ட் கிடைக்கும்னா நிச்சயம் பாடிடுவேன்’ என்று பதில் சொல்லியிருப்பார் அனிருத்.

இதையும் படிங்க: ‘கோட்’ படத்தில் அந்த நாலு பேருக்கு லீடர் இவரா? சத்தியமா கேப்டன் இல்லங்க

Next Story