ஒரே குஷி போலயே!.. அஜித் படத்துக்கு செம வைபில் BGM போடும் அனிருத்.. வைரலாகும் வீடியோ!..

by ramya suresh |
vidamuyarchi
X

vidamuyarchi

விடாமுயற்சி திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்தபோது எடுத்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி உள்ளிட்ட இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகின்றார். விடாமுயற்சி திரைப்படம் கடந்த 2 வருடங்களாக எடுக்கப்பட்டு வருகின்றது. லைக்கா நிறுவனம் தயாரிக்க மகிழ் திருமேனி இந்த திரைப்படத்தை இயக்கி வருகின்றார்.

இதையும் படிங்க: அம்மாடியோ!.. இத்தனை கோடியா?.. மகன் திருமணத்திற்கு நாகார்ஜுனாவின் காஸ்ட்லி பரிசு!..

கடந்த ஒன்றரை வருடங்களாக படம் எடுக்கப்பட்டு வருகின்றது. ஆனால் தற்போது வரை படத்தின் படப்பிடிப்பு முடிந்த பாடில்லை. விடாமுயற்சி திரைப்படத்திற்கு பிறகு நடிகர் அஜித் கமிட்டான திரைப்படம் குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகின்றது.

இப்படத்தின் படப்பிடிப்பு கூட ஏறத்தாழ முடிவடைந்து விட்டது. இன்னும் சில நாட்கள் மட்டுமே படத்தின் படப்பிடிப்பு பாக்கி இருப்பதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் இந்த இரண்டு திரைப்படங்களில் எந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடாமுயற்சி திரைப்படத்தின் டீசர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

ஹாலிவுட் தரத்திற்கு படத்தின் காட்சிகள் அனைத்தும் இடம்பெற்று இருந்தன. இதில் நடிகர் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். டீசரில் வெளியான பிஜிஎம் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்திருந்தது.

இதனால் ரசிகர்கள் பலரும் ராக்ஸ்டார் அனிருத் எப்போதும் போல இந்த திரைப்படத்திலும் சம்பவம் செய்திருக்கின்றார் என்று பெருமையுடன் கூறி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது .விடாமுயற்சி திரைப்படத்திற்கு பிஜிஎம் போடும்போது நடிகர் அனிருத் செம வைபில் குதித்து குதித்து என்ஜாய் செய்கின்றார்.

இதையும் படிங்க: அம்மாடியோ!.. இத்தனை கோடியா?.. மகன் திருமணத்திற்கு நாகார்ஜுனாவின் காஸ்ட்லி பரிசு!..

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் என்ன இப்படி பாட்டு போட்டுகிட்டு இருக்காரு என்று ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. நடிகர் அஜித்தின் நடிப்பில் கடந்த இரண்டு வருடங்களாக எந்த திரைப்படங்களும் வெளியாகாத நிலையில் வரும் பொங்கலுக்காவது அஜித்தின் ஏதாவது ஒரு திரைப்படம் வெளியாக வேண்டும் என்று ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.

Next Story