More
Categories: Cinema News latest news

மவனே பிட்டா அடிக்கிற!.. அனிருத்தை வசமாக சிக்க வைத்த ரசிகர்கள்.. ஓனருட்ட பிடிச்சு கொடுத்துட்டோம்ல!..

Anirudh: தமிழ் சினிமாவின் ஹிட் இசையமைப்பாளரான அனிருத் பக்கம் தற்போது ஒரு சர்ச்சை உருவாகி இருக்கிறது. அதனை பெரிதாக்கி இருக்கிறார்கள் ரசிகர்கள். இதனால் லியோ படக்குழுவே கொஞ்சம் அதிர்ச்சியில் தான் இருக்கிறார்களாம்.

சினிமா வட்டாரத்தில் காப்பி அடிப்பது என்னவோ அல்வா சாப்பிடுவது போலாகி விட்டது. அசால்ட்டாக ஒரு கதையையோ, இல்ல ட்யூனையோ காப்பி அடித்து வேறு ஒன்றை உருவாக்கி விடுகின்றனர். இதை சிலர் கண்டுபிடித்தாலும் அதை கடந்து விடுகின்றனர்.

Advertising
Advertising

இதையும் வாசிங்க:என்ன வேணாலும் பேசிட்டு போங்க… யாருக்கும் தெரியாம சிவகார்த்திகேயன் என்ன செய்றாரு தெரியுமா?…

ஆனால் அனிருத்தின் சமீபத்தில் எல்லா பாடல்களின் ட்யூனுமே வேறு ஒரு மியூசிக்கின் ட்யூனை ஒத்து இருப்பதாக தொடர்ச்சியாக சர்ச்சை நீடித்து வந்தது. இருந்தும் யாருமே அதை பெரிதாக பேசிக்கொள்ளவில்லை. ஆனால் ஏற்கனவே லியோ சர்ச்சை எக்கசக்கமாக இருக்கும் நிலையில் இதையும் சேர்த்து கிளப்பி விட்டனர்.

இந்நிலையில் லியோ படத்தின் ஐம் ஆர்டினரி பெர்சன் என்ற பாடலை பீக்கி ப்ளைண்டர் பாடலின் காப்பி என ரசிகர்கள் பிரச்னையை கிளப்பி விட்டனர். அதுமட்டுமில்லை இந்த பாடலை ஒரிஜினலாக இசையமைத்த ஓடிநிக்காவுக்கு நேரடியாக ரசிகர்கள் மெசேஜை அனுப்பி விட்டனர்.

இதனையடுத்து பிரபல ஆங்கில பாடகர் ஓடிநிக்காவே இந்த பிரச்னை குறித்து வாய் திறந்து இருக்கிறார்.

அதில் என்னுடைய இன்ஸ்டா, மெயிலில் ஆயிரக்கணக்கான மெசேஜ்கள் குவிந்துகொண்டே இருக்கிறது. அதிலும் வேர் ஆர் யூ பாடலுக்கு கீழ் லியோ படம் காப்பி குறித்து தொடர்ந்து கமெண்ட் செய்து வருகிறீர்கள். இன்னும் நிலைமை குழப்பமாகவே இருக்கிறது. இந்த பிரச்னை குறித்து இப்போ தான் பார்க்க இருக்கின்றோம் எனக் குறிப்பிட்டார்.

இதையும் வாசிங்க: சாதுவாக மாறிய ரஜினிகாந்த்… ராகவேந்திரராகவே தன்னை காட்டியதற்கு பின் இந்த ரகசியமும் இருக்காம்…

இந்த பதிவைக்காண: https://x.com/MSPMovieManiac/status/1716732030481031600?s=20
Published by
Akhilan

Recent Posts