பாட்டு வேணுமா இத்தனை மாசம் கழிச்சு வாங்க… லியோ இரண்டாம் சிங்கிள் லேட் இதான் காரணமா?

by Akhilan |
பாட்டு வேணுமா இத்தனை மாசம் கழிச்சு வாங்க… லியோ இரண்டாம் சிங்கிள் லேட் இதான் காரணமா?
X

Anirudh: தமிழ் சினிமாவின் தற்போதைய ட்ரெண்ட் இசையமைப்பாளர்களில் முதலிடம் பிடித்து இருப்பவர் அனிருத் தான். ஆனால் அவர் தற்போது இருக்கும் பிஸியில் யாரும் பாட்டு கேட்க போனாலே மனுஷன் கடுப்பாகி விடுவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

3 திரைப்படத்துக்கு இசையமைத்த அனிருத்தின் முதல் பாடல் “வை திஸ் கொலவெறி டி”, உலகம் முழுவதும் வைரலாகியது. அப்பாடல் யூடியூப்பில் 400 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. இதுவே அனிருத்துக்கு கோலிவுட்டில் ஒரு இடத்தினை கொடுத்தது.

இதையும் படிங்க: லியோ படத்தில் விக்ரம்… லோகேஷை பகிரங்கமாக மாட்டி விட்ட கமல்ஹாசன்… இருக்குமோ!

அப்படத்தினை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி படத்துக்கு இசையமைத்தார். அப்படத்திலும் செல்ஃபி புள்ள பாடல் பெரிய ஹிட் கொடுத்தது. அடுத்த வாய்ப்பாக ரஜினிகாந்தின் பேட்ட படத்திற்கு இசையமைப்பு செய்தார்.

இதை தொடர்ந்து அனிருத் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இடத்தினை பிடித்து இருக்கிறார். கமல் தொடங்கி தமிழ் சினிமாவின் அனைத்து உச்ச நட்சத்திரங்களுக்கும் ஒற்றை ஆளாக இசையமைப்பு செய்கிறார். அடுத்து லியோ, தலைவர் 171, விடாமுயற்சி, இந்தியன்2 என எல்லா படங்களுக்குமே அனிருத் தான் இசையமைப்பு செய்கிறார்.

இதையும் படிங்க: நான் தப்புனா பாரதியாரும் தப்புதான்… பாடல் வரியை மாற்ற முடியாது… கறாராய் சொன்ன வாலி…

இதனால் அவருக்கு வேறுபடத்தின் இயக்குனர்கள் வாய்ப்பு கொடுக்க வந்தால் அட்வான்ஸ் கொடுத்தா 6 மாசம் கழித்து தான் பாட்டு கிடைக்கும் என கறாராக சொல்லி விடுகிறாராம். அதற்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே காசை வாங்க படத்தினை ஓகே செய்கிறாராம்.

இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி தினத்தில் நேற்று வெளியாக இருந்த லியோ படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகவில்லை. இதுவும் அனிருத் பிஸியாக இருப்பதால் தான் தாமதமாகி விட்டதாக படக்குழு தரப்பில் இருந்து தகவல்கள் தெரிவிக்கிறது.

Next Story