இதற்காகத்தான் சின்ன வயதில் இருந்து காத்திருந்தேன்… சிங்கிளை வெளியிட்டு நெகிழ்ந்த அனிருத்!...
Anirudh: தமிழ் சினிமாவில் அனிருத் தற்போது தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக மாறி இருக்கிறார். அவர் தற்போது இந்தியன்2 படத்துக்கு இசையமைத்து வரும் நிலையில் அவரின் சமீபத்திய எக்ஸ் பதிவு பலருக்கும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தி இருக்கிறது.
ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் 1996ம் ஆண்டு வெளிவந்த பிளாக்பஸ்டர் திரைப்படத்தின் தொடர்ச்சிதான் "இந்தியன் 2". இப்படத்தில் கமல் அப்பா மற்றும் மகன் என இருவேடத்தில் நடித்திருந்தார். கஸ்தூரி, சுகன்யா, மனிஷா கொய்ராலா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். முதல் பாகத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்தார்.
இதையும் படிங்க: விஜயகாந்தை பற்றி கமல் எப்போதும் சொல்லும் ஒரு வார்த்தை! போட்டி நடிகர்களையே பிரமிக்க வைத்த கேப்டன்
படத்தின் எல்லா பாடல்களுமே மிகப்பெரிய அளவு ஹிட் கொடுத்தது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. தொடர்ச்சி கதையாக இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகி இருக்கிறது. 2017ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இப்படம் ஜூலை மாதம் ரிலீஸாக இருக்கிறது. இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க இருக்கிறார்.
ஏற்கனவே முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் ரஜினிக்கு மிகப்பெரிய அளவில் ஹிட் பாடல்களை கடந்த வருடம் கொடுத்திருந்தார். அதுமட்டுமல்லாமல் அஜித்குமாருக்கு விடாமுயற்சி திரைப்படத்திலும் இசையமைத்து வருகிறார். இதுவே இந்தியன் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. அந்த வகையில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே படத்தின் முதல் சிங்கள் இன்று வெளியாகி இருக்கிறது.
இதையும் படிங்க: விஜயகாந்த் குடும்பத்துக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்! தளபதினா சும்மாவா?
பாரா என தொடங்கும் இப்பாடலை பா விஜய் எழுதியிருக்கிறார். அனிருத்துடன் இணைந்து இந்த பாடலை ஸ்ருதிகா சண்முத்ராலா என்ற பாடகி பாடி இருக்கிறார். வைரலாகும் இப்பாடல் ஹிட் லிஸ்ட்டை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பாடலை தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டு இருக்கும் அனிருத், இதற்காக தான் என் சின்ன வயதில் இருந்து காத்திருந்தேன். என் மாஸ்டர் ஷங்கர் படத்துக்கும், மீண்டும் கமல்ஹாசன் படத்துக்கும் இசையமைத்து இருக்கேன் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.
அனிருத் பதிவைக் காண: https://x.com/anirudhofficial/status/1793243003802341588