ஓவர் பிஸி ரூட்டில் அனிருத்… சம்பளம் மட்டுமே இத்தனை கோடியா? ஆத்தாடி!...

by Akhilan |   ( Updated:2025-03-31 02:10:40  )
ஓவர் பிஸி ரூட்டில் அனிருத்… சம்பளம் மட்டுமே இத்தனை கோடியா? ஆத்தாடி!...
X

anirudh

Anirudh: பிரபல இசையமைப்பாளர் அனிருத் தற்போது கோலிவுட்டில் கொடி கட்டி பறந்து வரும் நிலையில் அவர் வாங்கும் சம்பளம் குறித்த ஆச்சரிய அப்டேட் வெளியாகி வருகிறது.

தனுஷ் நடிப்பில் 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். முதல் படமே மிகப்பெரிய சூப்பர்ஹிட்டாக அமைய அனிருத் மார்க்கெட் எகிறியது. முன்னணி ஹீரோக்களின் ஆஸ்தான இசையமைப்பாளராக மாறினார்.

தனுஷ் மற்றும் அனிருத் கூட்டணி என்றாலே பாடல்கள் சூப்பராக அமைய அதற்கே ஒரு ரசிகர்கள் கூட்டம் அமைந்தனர். இந்நிலையில் ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்தனர். அனிருத் அதை தொடர்ந்து இன்னும் முன்னேறினார். தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களுக்கு இசையமைத்து வந்தார்.

அனிருத்

கடந்த இரண்டு ஆண்டுகளாக அனிருத் எப்போதுமே பிஸியாகவே வலம் வருகிறார். அதிலும் ஜெயிலர் படத்தில் அவர் இசையமைத்த ஹுக்கும் அதிரிபுதிரி ஹிட்டடிக்க வாவ் சொல்லாத ஆளே இல்லை என்ற நிலைமை வந்தது.

விஜயிற்கு லியோ, அஜித்திற்கு விடாமுயற்சி என லிஸ்ட் மட்டும் நீண்டுக்கொண்டே போனது. தற்போது விஜயின் ஜனநாயகன், ரஜினிகாந்தின் ஜெயிலர் 2, கமல்ஹாசனின் தக் லைஃப் என வரிசையாக சூப்பர் ஸ்டார் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இதனால் அனிருத் சின்ன படங்களுக்கு புக் செய்யப்படாத நிலை உருவாகி இருக்கிறது. மார்க்கெட்டில் இப்போ அனிருத் உச்சத்தில் இருப்பதால் அவருக்கு சம்பளமாக 19 கோடி வரை கொடுத்து வருகிறார்களாம். கோலிவுட்டில் அதிகம் சம்பளமும் இவருக்கு தான் எனவும் கூறப்படுகிறது.

Next Story