Categories: latest news

விஜயின் மாஸான அறிமுக காட்சிக்கு மியூசிக் போடும் அனிருத்… தீயாய் பரவும் வீடியோ….

மாஸ்டர் படத்திற்கு பின் விஜய் தற்போது ‘கோலமாவு கோகிலா’ மற்றும் ‘டாக்டர்’ பட இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் 4ம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் டெல்லியில் நடைபெற்றது.

விஜய் நடித்த மாஸ்டர் படத்திற்கும் அனிருத்தே இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற குட்டி ஸ்டோரி, வாத்தி கம்மிங் ஆகிய பாடல்கள் விஜய் ரசிகர்களுக்கு விருந்தாக இருந்தது. வாத்தி கம்மிங் பாடல் யுடியூப்பில் பலராலும் பார்க்கப்பட்டு சாதனை படைத்தது. மாஸ்டர் படத்தில் துள்ளலான இசையை அனிருத் அமைத்திருந்தார்.

தற்போது பீஸ்ட் படத்திற்கும் அவர்தான் இசையமைப்பாளர் என்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இப்படத்தின் பாடல்களுக்காக விஜய் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், மாஸ்டர் படத்தில் விஜய் அறிமுகமாகும் அந்த அதகளமான காட்சிக்கு அனிருத் பின்னணி இசை அமைக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் பலரும் பகிர்ந்து இதே போல பீஸ்ட் படத்திலும் மாஸான பின்னணி இசையை அமைப்பார் என பதிவிட்டு வருகின்றனர்.

Published by
சிவா