அந்த நடிகையுடன் நெருக்கமாக அனிருத்....இதுக்கு பின்னாடி என்ன கதையோ!...

by சிவா |
anirudh
X

தமிழில் தனுஷ் நடித்த 3 திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இவரும் தனுஷும் சேர்ந்து உருவாக்கிய ஒய் திஸ் கொல வெரி பாடல் உலகமெங்கும் ஹிட் அடித்தது. அதன்பின் அப்பாடல் 3 திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டது.

தனுஷின் வேலை இல்லா பட்டதாரி, மாரி உள்ளிட்ட படங்களில் ரசிகர்களை கவரும் பாடல்களை கொடுத்தவர் அனிருத். அதன்பின் அவர்களின் கூட்டணி பிரிந்துவிட்டது.

anirudh

தனுஷ் மட்டுமில்லாமல் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்ட மற்ற முன்னணி நடிகர்களுக்கும் இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக மாறியுள்ளார். விஜய்க்கு மாஸ்டர் படத்தில் அவர் இசையமைத்த பாடல் வைரல் ஹிட். ரஜினிக்கு தர்பார் படத்திலும், இந்தியன் 2-வில் கமலுக்கும் அவர் இசையமைத்துள்ளார். தற்போது பீஸ்ட் படத்திற்கும் அவர்தான் இசையமைப்பாளர்.

anirudh

சொந்த வாழ்க்கையில் சில நடிகைகளுடன் கிசுகிசுக்கப்படுபவர்தான் அனிருத். ஏற்கனவே பாடகி ஆண்ட்ரியாவை காதலித்தார். இருவரும் உதட்டோடு உதடு முத்தம் கொடுத்துக்கொண்ட புகைப்படம் இப்போதும் கூகுளில் இருக்கிறது. அதன் டாக்டர் படத்தில் அவருடன் இணைந்து செல்லம்மா பாடலை பாடிய ஜோனிடா என்பவருடன் அவருக்கு காதல் என கிசுகிசு வெளியானது.

இந்நிலையில், மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனனுடன் நெருக்கமாக அமிர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘இதுக்கு பின்னாடி என்ன கதையோ!’ என கிண்டலடித்து வருகின்றனர்.

anirudh

Next Story