அனிருத் போட்ட ஒற்றை போஸ்டர்!.. ஆல் தளபதி ஃபேன்ஸும் ஹேப்பி.. அதே சம்பவம் லியோவிலும் உறுதி!..

லோகேஷ் கனகராஜன் அனிருத்தும் இணைந்தால் சம்பவம் உறுதிதான் என்பதை விக்ரம் படத்தின் மூலமே உறுதி செய்த நிலையில் தற்போது மீண்டும் லியோ படத்துக்கு அதே போன்ற ஒரு போஸ்டரை ராக்ஸ்டார் அனிருத் வெளியிட்டுள்ளார்.

ரஜினிகாந்தின் ஜெயிலர், ஷாருக்கானின் ஜவான் என இந்த ஆண்டு தொடர்ந்து அடுத்தடுத்து இண்டஸ்ட்ரி ஹிட் படங்களுக்கு இசையமைத்து வரும் அனிருத் இசையில் அடுத்ததாக தளபதி விஜயின் லியோ படம் ரிலீஸ் ஆக உள்ளது.

இதையும் படிங்க: படையப்பாவுக்கு பரிசாக கிடைத்த ஆறுபடையப்பா!.. சூட்டிங் ஸ்பாட்டில் கிடைத்த ஆசிர்வாதம்.. வைரலாகும் பிக்ஸ்!

கடைசி நேரம் வரை படத்தின் ரீ ரெக்கார்டிங் பணிகளுக்காக கடுமையாக உழைத்து வந்த அனிருத் தற்போது அந்த போஸ்டரை வெளியிட்டு ஒட்டுமொத்த பணிகளும் நிறைவடைந்து விட்டதாக லியோ படக் குழுவினரையும் விஜய் ரசிகர்களையும் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளார்.

வரும் அக்டோபர் 19-ஆம் தேதி லியோ திரைப்படம் ரிலீசாக உள்ள நிலையில், அக்டோபர் 15-ஆம் தேதி பின்னணி இசை அமைக்கும் பணிகள் முழுவதுமாக முடித்து விட்ட அனிருத் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு Locked & Loaded லியோ வரும் அக்டோபர் 19 தெறிக்கப் போகிறது என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: லியோ FDFS பார்க்க ரெடியான ரஜினிகாந்த்!.. பின்ன அடுத்த படத்தை லோகேஷை நம்பி கொடுத்துருக்காரே!..

ஜெயிலர், ஜவான், லியோ மற்றும் தெலுங்கில் ஜூனியர் என்டிஆரின் தேவரா என தொடர்ந்து அனிருத் பிஸியாக இசையமைத்துக் கொண்டிருக்கிறார். மேலும் வெளிநாடுகளில் தனது ரசிகர்களுக்காக இசை நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வருகிறார்.

தலைவர் 170, தலைவர் 171 படங்களுக்கும் அனிருத் தான் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் படத்தின் ரிலீசுக்கு முன்பாக உலகநாயகன் கமல்ஹாசனின் போஸ்டர் முன்பாக போஸ் கொடுத்து போட்டோவை வெளியிட்டது போல தற்போது லியோ படத்திற்கு முன்பாக தளபதி விஜய்யின் முன்பாக நின்று போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டு அதிரடி காட்டி உள்ளார் அனிருத்.

 

Related Articles

Next Story