Cinema News
என்னங்கப்பா எல்லாரும் இங்கையே தங்கிட்டீங்க.. அனிருத் லிஸ்ட்டில் அடுத்த வருடம் இத்தனை படங்களா..?
Anirudh: தமிழ் சினிமாவில் தற்போதைய நேரத்தில் அதிக படங்களை கையில் வைத்திருக்கும் ஒரே இசையமைப்பாளர் என்ற பெருமையை பெற்று விட்டார் அனிருத். அதில் எல்லாமே மாஸ் நாயகர்கள் என்பது தான் கூடுதல் சுவாரஸ்யமே. அடுத்த வருஷம் அனிருத் இசையமைக்க இருக்கும் பட பட்டியல் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
அனிருத் இந்த வருடம் விஜயின் லியோ, ரஜினிகாந்தின் ஜெயிலர் ஆகியவை மிகவும் பேசப்பட்டது. ஹுக்கும் என்ற ஒற்றை வார்த்தையை வைத்து வைரலானர். இதனால் இந்த வருஷம் முழுதும் அனிருத் ஹிட் லிஸ்ட்டில் இருந்தார்.
இதையும் படிங்க: விஜயகாந்த் இத செஞ்சிருந்தா இந்த பிரச்சினையே வந்திருக்காது! மிஸ் பண்ண வருத்தத்தில் ரசிகர்கள்
சரி இப்போ இப்படி இருக்குனா அடுத்த வருஷம் அதை விட அதிகமாகவே இருக்கிறது. அனிருத் அடுத்த வருடம் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாக இருக்கும் வேட்டையன், தலைவர்171 ஆகிய படங்களுக்கு இசையமைக்க இருக்கிறார். ஜெயிலர் தனி அடையாளம் கொடுத்ததால் இனி ரஜினிக்கு அவரே ஆஸ்தான இசையமைப்பாளராக இருக்கலாம்.
அடுத்து நான் மட்டும் என்ன தக்காளி தொக்கா என்ற ரீதியில் கமல்ஹாசனின் இந்திய 2 மற்றும் 3 பாகங்களுக்கும் அனிருத் தான் இசையமைக்கிறார். எல்லா ஹீரோக்களும் இவர்கிட்ட போயிட்டா நம்ம எப்படி மிஸ் பண்ணலாம் என்ற ரீதியில் அஜித்தின் விடாமுயற்சியும் அனிருத்தே இசையமைக்கிறார்.
இதையும் படிங்க: ப்ரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் படத்தின் கதை தானா..? இது அது இல்ல..! கலாய்க்கும் ரசிகர்கள்..!
அடுத்து சிவகார்த்திகேயனின் 23வது திரைப்படம், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ப்ரதீப் ரங்கநாதன் நடிப்புக்கும் எல் ஐசி படத்துக்கும் அனிருத் தான் இசையமைப்பார். கவினின் நான்காவது திரைப்படம், ஜூனியர் என் டிஆரின் தேவாரா, அன்பறிவு இயக்கத்தில் உருவாகும் படம், விஜய் தேவரகொண்டாவின் 12வது திரைப்படம், அல்லு அர்ஜூனின் அடுத்த திரைப்படம்.
விக்னேஷின் சிவனின் உதவி இயக்குனர் இயக்கும் அதர்வா, குஷி கபூர் நடிக்கும் படத்துக்கும் அனிருத் தான் இசையமைக்கிறார். தற்போதைய நிலையில் விஜயின் அடுத்த படத்துக்கு யுவன் மட்டுமே அனிருத்தின் ஒரே போட்டியாக இருக்கும். மற்ற இசையமைப்பாளர்கள் எல்லாம் வேற மொழியில் ஹிட் கொடுக்க போயிட்டதாக ரசிகர்கள் கிசுகிசுக்கின்றனர். இதில் ஆர்.டி.எக்ஸ் படத்துக்கு இசையமைத்த சாம்சிஎஸ் தான் பெஸ்ட் உதாரணம் என்பது குறிப்பிடத்தக்கது.