விஜய் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் ஜனநாயகன். இந்த படம் வருகிற 10ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. விஜய் அரசியலுக்கு சென்றுவிட்ட நிலையில் ஜனநாயகன் அவரின் கடைசிப் படமாக பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நடந்த ஜனநாயகன் இசை வெளியிட்டு விழாவிலும் இது என்னுடைய கடைசி படம் என விஜய் உறுதி செய்தார்.
தெலுங்கில் பாலகிருஷ்ணன் நடித்து வெளிவந்த பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக்காக ஜனநாயகன் படம் உருவாகியிருக்கிறது. அதேநேரம் தமிழுக்கு ஏற்றவாறு பல மாற்றங்களை இப்படத்தின் இயக்குனர் ஹெச்.வினோத் செய்திருக்கிறாராம். இந்த படத்தின் சில போஸ்டர்களும் சில பாடல்களும் ஏற்கனவே வெளியானது.
படம் 10ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் புத்தாண்டை முன்னிட்டு நேற்று நள்ளிரவு 12 மணிக்கு ஜனநாயகன் படத்தின் டிரெய்லர் வீடியோவை வெளியிட திட்டமிட்டிருந்தனர். எனவே அதை காண விஜய் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
ஆனால் ஜனநாயகன் நேற்று இரவு 12 மணிக்கு வெளியாகவில்லை. இது விஜய் ரசிகர்களை அப்செட் ஆகியிருக்கிறது. இந்நிலையில்தான் ஜனநாயகன் டிரெய்லர் வெளிவராமல் போனதற்கு அனிருத்தான் காரணம் என்பது தற்போது தெரிய வந்திருக்கிறது. அதாவது ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா தொடர்பாக மூன்று நாட்கள் மலேசியாவில் இருந்தார் அனிருத்.
எனவே ஜனநாயகன் டிரெய்லருக்கான பின்னணி இசையை அவர் செய்து கொடுக்கவில்லை. அதனால்தான் டிரெய்லர் வீடியோ திட்டமிட்டபடி வெளியாகவில்லை என்கிறார்கள். அனேகமாக வருகிற 3 அல்லது 5ம் தேதி ஜனநாயகன் டிரெய்லர் வீடியோ வெளியாகும் என தெரிகிறது.
