இசை அமைப்பாளர்களில் எஸ்.எஸ்.ராஜமௌலின்னா யாருன்னு தெரியுமா? எல்லாமே அதிரடிதான்!..

by sankaran v |
raja1_cine
X

rajamouli

தமிழ்த்திரை உலகில் இன்றைய இளம் அதிரடி இசைஅமைப்பாளர் அனிருத்தான். ஜெயிலர், ஜவான், லியோன்னு எல்லாமே சூப்பர்ஹிட் தான். தற்போது நம்பர் ஒன் இசை அமைப்பாளர் யார் என்றால் இவர்தான் என சிறுவர்கள் கூட சொல்ல ஆரம்பித்து விட்டனர்.

அனிருத்தின் இசையில் வரும் பாடல்கள் எல்லாம் அதிரடியாகத்தான் உள்ளன. தற்போது வரை சிறுவர்கள் மனப்பாடம் செய்து வைத்துள்ள பாடல் லியோவில் வரும் நான் ரெடிதான் வரவா. இவர்களுக்கு தேவையான துள்ளல் இசையைக் கொடுப்பவர் தான் இந்த அனிருத். ஆள் தான் ஒல்லி. அடிச்சா அதிரடி தான் என தொடர்ந்து தன் படங்களில் நிரூபித்து வருகிறார் அனிருத்.

Aniruth

படத்துக்கு நடிகர் யார் என்று கேட்ட காலம் போய் மியூசிக் யார்னு கேட்க வச்சிட்டாரு அனிருத். அவர் இசையில் பாட்டே நல்லா இல்லேன்னாலும் பெரிசா யாரும் கண்டு கொள்வதில்லை. அற்புதமான பிஜிஎம் என்று சொல்றாங்க. அந்த அளவுக்கு அவரோட வெற்றியில முக்கியப் பங்கு வகிக்கிறது இந்த பிஜிஎம்.

Indian 2

தற்போது என்டிஆரின் தேவரா, விஜய் தேவர கொண்டா மற்றும் கௌதம் தின்னனூரியின் படம், அஜீத்தின் படம், ரஜினியின் தலைவர் 170, தலைவர் 171, இந்தியன் 2 என படுபிசியாக இருக்கிறார்.

கொரட்டாலா சிவா இயக்கத்தில் என்டிஆர் நடித்த தேவரா அனிருத்தின் இசையில் பெரிய எதிர்பார்ப்புக்குரிய படம். ஏப்ரல் 5, 2024ல் வெளியாக உள்ளது. இது என்டிஆருக்கு இன்னொரு சிம்ஹாத்ரி என்கின்றனர் சினிமா விமர்சகர்கள்.

இன்றைய பிரபல நடிகர்களின் படத்தோட வெற்றிக்கு மிகவும் உறுதுணையாக இருப்பவர் அனிருத் என்றால் மிகையில்லை.

Next Story