இது தப்புதான்.. வேற வழியில்ல.. பாடல்களை இசையமைப்பது குறித்து அனிருத் சொன்ன தகவல்

by Rohini |   ( Updated:2025-05-03 20:41:49  )
aniruth (1)
X

aniruth (1)

Aniruth: இன்று தமிழ் சினிமாவில் ராக் ஸ்டார் ஆக திகழ்ந்து வருபவர் இசையமைப்பாளர் அனிருத். 3 என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முதலில் இசை அமைப்பாளராக அறிமுகமானார் அனிருத். இவரை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தது தனுஷ். முதல் படமே அனிருத்தை இந்த உலகிற்கு யார் என காட்டியது. அதிலிருந்து தொடர்ந்து தன்னுடைய துள்ளலான இசையால் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

விஜய், அஜித், ரஜினி, கமல் என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இனி இவர்தான் இசை என்ற ஒரு சூழ்நிலையை உருவாக்கினார் அனிருத். அதுவரை பெரிய பெரிய முன்னணி நடிகர்களுக்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வந்த நிலையில் அவரையே டேக் ஓவர் செய்து இன்று இந்திய சினிமாவில் போற்றத்தக்க வகையில் வளர்ந்து நிற்கிறார் அனிருத்.

தமிழ் மட்டுமல்ல மற்ற மொழி சினிமாக்களிலும் இவர் இசையமைத்து வருகிறார். வெளிநாடு கச்சேரிகளையும் நடத்தி உலக அளவில் மிகவும் பாப்புலர் ஆகி இருக்கிறார். இந்த நிலையில் சமீப காலமாக காப்பி ரைட்ஸ் என்ற ஒரு பிரச்சனை போய்க்கொண்டிருக்கிறது. அதுவும் தன்னுடைய பாடல்களை தன் அனுமதியின்றி படங்களில் பயன்படுத்துவதை எதிர்த்து இளையராஜா குரல் கொடுத்து வருகிறார்.

இளையராஜாவுக்கு ஆதரவாக அவருடைய தம்பியும் இசையமைப்பாளருமான கங்கை அமரனும் சேர்ந்து குரல் கொடுத்து வருகிறார். சமீபத்தில் ஒரு விழா மேடையில் பேசிய போது கூட சொந்தமா உங்களால பாட்டு போட முடியாதா .ஏழு கோடி சம்பளம் வாங்கிட்டு என்ன பண்றீங்க. உங்கள் இசையில் அமைந்த பாட்டுக்கு கைதட்டுவதை விட எங்களுடைய பாடல்களுக்கு தான் ரசிகர்கள் கைதட்டுகிறார்கள் என்றெல்லாம் பேசி இருந்தார் கங்கை அமரன்.

இந்த நிலையில் நாங்கள் எந்த சூழ்நிலையில் இசை அமைக்கிறோம் என்பதை பற்றி அனிருத் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அவர் சொன்ன அந்த தகவல் இப்போது வைரலாகி வருகின்றது. இதோ அவர் கூறியது. நாங்கள் தினமும் பாடல்களை உருவாக்குகிறோம். அதில் நன்றாக இருக்கிறது என தோன்றும் பாடல்களை தனியாக சேமித்து வைப்போம். அவற்றுக்கு பொருத்தமான சூழல் கொண்ட படம் வரும் போது கொடுத்துவிடுவோம். .

ஒரு படத்தின் சூழலுக்கு என உருவாக்கும் பாடல் மிகக் குறைவு. நான் இசையமைத்த பாடல்களில் 85% பாடல்கள் இந்த படத்துக்கு என முடிவு செய்து உருவாக்கியதில்லை. இது தவறான வழிமுறைதான். ஆனால் எங்களுக்கு இது சரியாக இருப்பதால் செய்கிறோம் என கூறியிருக்கிறார் அனிருத்.

Next Story