Connect with us
devara

Cinema News

தேவாரா புரோமோஷனில் அசிங்கப்பட்ட அனிருத்! இந்த அவமானம் தேவையா?

Aniruth: நேற்று சென்னையில் தேவாரா படத்தின் புரோமோஷன் நடைபெற்றது. இந்தப் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக ஜான்வி கபூர் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இதன் மூலம் தெலுங்கில் அறிமுகமாகும் படமாக தேவாரா படம் ஜான்விக்கு அமைந்துள்ளது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

பேன் இந்தியா படமாக உருவாகியுள்ள தேவாரா படத்தின் ஒரு சில பாடல்கள் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல வைப் ஏற்பட்டிருக்கிறது. அதனால் நேற்று பத்திரிக்கையாளர்கள் முன் இந்தப் படத்தின் புரோமோஷன் நடைபெற்றது. அப்போது ஜான்வி பேசும் போது ‘ நான் சென்னைக்கு என் அம்மாவுடன் அடிக்கடி வந்திருக்கிறேன்’ என கூறினார்.

இதையும் படிங்க: சிறுவனை சரியாக கணித்த அஜித்! உடனே 5 லட்சத்தை கொடுத்து பிரமிக்க வைத்த தல

அதனால் எனக்கு பழக்கப்பட்ட ஊர் தான் சென்னை என்றும் நானும் என் குடும்பமும் இந்தளவுக்கு நல்லா இருக்கிறோம் என்றால் அது இங்குள்ள ரசிகர்களால்தான் என்றும் அவருடைய அழகிய தமிழில் பேசினார். தமிழிலும் எத்தனையோ படங்களில் நடிக்க ஜான்வியை கேட்டார்கள்.

ஆனால் போனிகபூர்தான் மறுத்து வருகிறார். ஹிந்தியில் பல படங்களில் ஜான்வி நடித்து மிகவும் பிரபலமானவர். இப்பொழுதுதானே சென்னைக்கு வந்திருக்கிறார். கூடிய சீக்கிரம் தமிழ் படங்களிலும் நடித்து விடுவார். இந்த நிலையில் அனிருத் பேசும் போது தேவாரா படத்தில் அவர் இசையமைத்த ஒரு பாடலை பாடினார் அனிருத்.

இதையும் படிங்க: விக்ரமுடன் பல கெட்டப்புகளில் நடித்த சசிக்குமார்!.. அட யாருக்கும் தெரியாம போச்சே!…

மீதி லைனை ரசிகர்கள் பாடுவதற்காக மைக்கை திருப்பினார். யாரும் பாடவில்லை. சரி தெலுங்கில் பாடுகிறேன் என மீண்டும் பாதி லைனை ரசிகர்கள் பாடுவார்கள் என மைக்கை திருப்பியும் ரசிகர்கள் தரப்பில் இருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை. அமைதியே காணப்பட்டது.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ரஜினி, அஜித் , விஜய் போன்ற பெரிய நடிகர்களுக்கு இசையமைத்திருந்தாலும் அவர்கள் நடித்ததனால்தான் உங்கள் இசைக்கு இவ்ளோ ஒரு மரியாதை. உங்களுக்காக இல்லை. இதே அஜித், விஜய் , ரஜினி பட பாடல்களை பாடியிருந்தால் ரசிகர்கள் தரப்பில் இருந்து எப்பேற்பட்ட ஒரு பதில் வந்திருக்கும் என்பதை யோசிங்கள் அனிருத் என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.

இதையும் படிங்க: மீனாவை அடித்த சிட்டி… கோபி போட்ட சபதம்… ராஜியிடம் சண்டையிட்ட கோமதி!

google news
Continue Reading

More in Cinema News

To Top