வாவ் செம அழகு.. க்யூட்டான புகைப்படத்தை வெளியிட்ட அனுஸ்கா ஷர்மா!!

anishka sharma
கடந்த 2008ம் ஆண்டு ஹிந்தியில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'Rab Ne Bana Di Jodi' என்ற படத்தின்மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை அனுஸ்கா ஷர்மா. முதல் படத்திலேயே பெரிய நடிகருடன் அறிமுகமாகி முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் இவர்.
முதல் படத்தின் வெற்றிக்குப்பின் இவருக்கு மளமளவென புதிய படவாய்ப்புகள் குவிந்தது. ஹிந்தியில் முன்னணி நடிகர்களான மூன்று கான் நடிகர்களுடனும் ஜோடிசேர்ந்து நடித்துவிட்டார். அதிகபட்சமாக ஷாருக்கானுடன் இணைந்து ஐந்து படங்களில் நடித்துள்ளார்.

anishka sharma
அமீர் கானுடன் பி.கே, சல்மான் கானுடன் சுல்தான் படங்களில் நடித்து இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமடைந்தார். நான்கு ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலியை காதலித்து வந்த இவர் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
சமீபத்தில் இந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தபின் சமீப காலமாக அனுஸ்கா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். அந்தவகையில் தற்போது கருப்பு நிற உடையில் ஒரு படத்தை பதிவேற்றியுள்ளார்.

anishka sharma
இந்த படத்தில் மிகவும் அழகாக இருக்கிறார். இதில் அவரது அழகை ரசிகர்கள் கமெண்டில் வர்ணித்து வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.