‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தில் ரேவதிக்கு பதில் இவரா நடிக்க வேண்டியது?.. மிஸ் பண்ண சோகத்தில் பிரபல பாடகி!.
ஆர்.சுந்தராஜன் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் 1984 ஆம் ஆண்டு வெளியான படம் தான் ‘வைதேகி காத்திருந்தாள்’ திரைப்படம். இந்தப் படத்தில் ரேவதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அது போக கவுண்டமணி, செந்தில், ராதாரவி,வடிவுக்கரசி, கோவைசரளா, ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருந்தனர்.
படத்தின் கதை ஒரு பக்கம் இருந்தாலும் படத்திற்கு கூடுதல் சிறப்பே இளையராஜாவின் இசையில் அமைந்த பாடல்கள் தான். அதுவும் போக கவுண்டமணி செந்தில் காமெடிக்கும் குறைவு இல்லாமல் படம் வெற்றிகரமாக ஓடியது. மேலும் இரண்டு காதல் கதையை அடிப்படையாக கொண்டு இந்தப் படம் அமைந்திருக்கும்.
திருமணமான புதிதில் கணவரை இழந்த ரேவதியும் மாமா பொண்ணு உயிரையே வைத்திருந்தும் அதை காட்டிக் கொள்ளாத விஜயகாந்தை தவறாக புரிந்து கொண்டதால் விஷம் அருந்தி மாமா பொண்ணு உயிரை விட சோகத்தில் வாழும் கதாபாத்திரத்தில் விஜயகாந்தும் தங்களுடைய கதாபாத்திரத்தை அழகாக மெருகேற்றியிருப்பார்கள்.
இந்தப் படத்தில் விஜயகாந்திற்கும் சரி ரேவதிக்கும் சரி நல்ல ஒரு திருப்பு முனையாக அமைந்திருந்தது. இந்த நிலையில் ரேவதியின் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க வேண்டியது ஒரு பிரபல பாடகியாம். அவர் வேறு யாருமில்லை. பிரபல கிராமிய பின்னனி பாடகரான புஷ்பவனம் குப்புசாமியின் மனைவியும் பாடகியுமான அனிதா குப்புசாமி தான்.
வைதேகி காத்திருந்தாள் படப்பிடிப்பு மேட்டுப்பாளையத்தில் எடுத்துக் கொண்டிருந்த போது ஒரு பரதம் தெரிந்த நாயகிக்காகத் தான் தேடிக் கொண்டிருந்தார்கள். அனிதா குப்புசாமிக்கும் பரதம் நன்றாகவே ஆட தெரியுமாம். அதுவும் முதலில் பார்ப்பதற்கு ரேவதி மாதிரியே இருந்ததால் அனிதா குப்புசாமியின் அப்பாவிடம் கேட்டார்களாம்.
ஆனால் அவரின் அப்பாவோ மகளை படத்தில் நடிக்க வைக்க விரும்பவில்லை என்று கூறிவிட்டாராம். அனிதாவும் சினிமாவில் நடிக்க ஆர்வம் இல்லாமல் இருந்ததால் அவரும் முன்வந்து நடிக்க வில்லையாம். இதையும் தாண்டி ஜோதிகாவின் ‘மொழி’ படத்திலும் பிரகாஷ் ராஜுக்கு ஜோடியாக சொர்ணமால்யா கதாபாத்திரத்திற்கும் அனிதாவை நெருங்கினார்களாம். ஆனால் அதற்கும் முடியாது என்று சொல்லிவிட்டாராம்.
இதையும் படிங்க : ரஜினி ஒரு சுண்டைக்காய்!. எனக்கு அப்பவே தெரியும்… இப்படி சொல்லிட்டாரே மன்சூர் அலிகான்!….