என் கனவை நனவாக்கிய காலி நிலம்... வீடு கட்டிய அனுபவத்தை பகிர்ந்த அனிதா!

by பிரஜன் |   ( Updated:2022-06-21 09:41:15  )
என் கனவை நனவாக்கிய காலி நிலம்...  வீடு கட்டிய அனுபவத்தை பகிர்ந்த அனிதா!
X

anitha dp

வீடு கட்டிய அனுபவத்தை பகிர்ந்து பாராட்டுக்களை பெற்ற அனிதா சம்பத்!

செய்தி வாசிப்பாளினியாக இருந்து சமூகவலைத்தளங்களில் மிகப்பெரும் அளவில் பிரபலமானவர் அனிதா சம்பத். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு திறமையை வெளிக்காட்டினார். தொடர்ந்து திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள் என பிசியாக இருந்து வருகிறார்.

anitha 2

anitha 2

இவர் தன்னுடன் தொலைக்காட்சியில் வேலை பார்த்த கிராபிக் டிசைனர் பிரபா என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவரும் சேர்ந்து வீடு கட்டி அண்மையில் குடிபுகுந்தனர். அந்த அனுபவத்தை இப்போது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார் அனிதா.

anitha 3

anitha 3

அந்த பதிவில், சரியா ஒரு வருடம் முன்னாடி! முதல் நாள் நிலம் பார்த்த கையோட இந்த நிலத்துக்கு ஓகே சொல்லி 10,000/- ரூபாய் முன்பணம் கொடுத்த தருணம்,என்னும் நேத்து நடந்த மாதிரி நினைவு இருக்கு! காச கையில குடுத்த கையோட ஓரமா நின்னு நீண்ட நெடு நாள் கனவோட முதல் படினு நான் கலங்க, சொந்த வீட்டுக்காக ஏங்கி ஏங்கி உழைச்ச என் அப்பா இந்த நொடி கூட இருந்துருக்கனுமேனு பிரபா கலங்க..மகிழ்ச்சி ஏக்கம் வருத்தம் ஆனந்த கண்ணீர்,அப்பாக்களை மிஸ் பண்ண கண்ணீர்னு ஒரு பெரிய மனப்போராட்டமா இருந்த நாள் அது!

anitha 1

anitha 1

இதையும் படியுங்கள் : சாதனையில் பட்டையை கிளப்பும் சூர்யா- ஜோதிகா வாரிசு..! இந்த வயதில் இப்படி ஒரு வெற்றி..!

இனிமே நல்லபடியா எந்த தடங்கலும் இல்லாம சந்தோஷமா வீட்ட கட்டி முடிச்சிடனும் ங்குற எதிர்பார்ப்போடையும், யார் உதவியும் இல்லாம எங்க 29 வயசுல பெரிய பொருப்பை ஏத்திருக்கோம் ங்குற பொருப்புணர்ச்சி கலந்த மகிழ்ச்சியோடையும், வாழ்க்கை நம்மள எப்படி சுக்குநூறா புரட்டி போட்டாலும் மீண்டு ஜெயிச்சி வந்துடலாம் ங்குற நம்பிக்கையோடையும் பிரபா போட்டோ எடுக்க நான் போஸ் குடுத்த புகைப்படம் இன்னக்கி திரும்பி பார்க்கும்போது மகிழ்ச்சியா இருக்கு எனக்கூறி நினைவுகளை பகிர்ந்துள்ளார் .

Next Story