latest news
ஆபாச வீடியோ’க்களை அனுப்பிய நபர்… அனிதா சம்பத் என்ன பண்ணாருன்னு பாருங்க!
Anitha sampath: செய்தி தொகுப்பாளர், நடிகை, யூடியூபர், பிக்பாஸ் போட்டியாளர் என அனிதா சம்பத்திற்கு பன்முக திறமைகள் உள்ளன. தற்போது சுற்றுலா ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வருகிறார். படங்களில் நடித்து இருந்தாலும் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று வந்தபிறகு மிகவும் பிஸியான நபராக அனிதா மாறியிருக்கிறார்.
அதோடு மனதில் பட்ட கருத்துக்களை தைரியமாக பேசும் அனிதாவிற்கு, இன்ஸ்டாகிராமில் ஒரு நபர் ஆபாச வீடியோக்களை தொடர்ந்து அனுப்பி வந்துள்ளார். முதலில் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத அவர் ஒரு கட்டத்தில் இது தொடர்கதையாக பொறுக்க முடியாமல், அந்த நபரின் தகவல்களை இன்ஸ்டாகிராமில் வெளிப்படையாக தெரிவித்து, இந்த ஐடியை புகார் அளியுங்கள் என தன்னுடைய பாலோயர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அந்த நபரின் பெயர் அரவிந்த் லோகேஸ்வரன். இதைப்பார்த்த ரசிகர்கள் தற்போது அந்த ஐடி குறித்து இன்ஸ்டாவில் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் இதுபோன்ற செயல்களை செய்யும் நபர்களுக்கு எதிராக புகார் அளித்தால், அவர்களின் ஐடி சஸ்பெண்ட் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைதளங்கள் நாளுக்குநாள் மோசமாகி வரும் சூழ்நிலையில், தொந்தரவு செய்த நபர் குறித்து வெளிப்படையாக தெரிவித்த அனிதாவின் செயல் நிச்சயம் பாராட்டுக்கு உரியதுதான்.
இதையும் படிங்க: சிக்கலில் ரோகிணி… ராதிகாவை வெளியேற்றிய ஈஸ்வரி… ஹீரோயிசம் காட்டிய கதிர்!..