Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது வெளியிட்டு இருக்கும் அறிவிப்பு ஆச்சரியத்தை உருவாக்கி இருக்கிறது.
அனிதா சம்பத் நியூஸ் வாசிப்பாளராக தன்னுடைய கேரியரை தொடங்கினார். அவரின் தமிழ் பேச்சுக்கே ரசிகர்கள் அதிகம். இதனால் அவருக்கு சினிமாவில் நடிக்கவும் வாய்ப்பு வந்தது. அதை தொடர்ந்து அவருக்கு பிக்பாஸ் தமிழில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் அவர் தொடர்ந்து பேசிக்கொண்டு இருந்தது. தேவையில்லாமல் சண்டை கிளப்பியது உள்ளிட்ட பல பிரச்சனைகளால் பாதியிலேயே நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டார். ஆனால் அந்த புகழை சரியாக பயன்படுத்திக்கொண்டு சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருந்து வருகிறார். அவருடைய புரோமோஷன் போட்டோஷூட்டுக்கே நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர்.
அனிதா சம்பத் தொடர்ந்து அவருக்கு வீடும், அவர் அம்மாவுக்கு ஒரு சொந்த வீடு வாங்கி பலரை ஆச்சரியப்படுத்தி இருந்தார். இந்நிலையில் தொடர்ந்து அனிதா சம்பத் தற்போது வெளியிட்டு இருக்கும் பதிவில், தான் பி ஆப்டம் படிப்பை முடித்து இருக்கிறார்.

அதிகாரப்பூர்வமாக கண் டாக்டராக தான் ஆகி இருப்பதில் பெருமை கொள்வதாகவும் இதற்கு உதவிய ஆசிரியர்களுக்கும், நண்பர்களுக்கும் நன்றி என பதிவிட்டு இருக்கிறார். பரபரப்பான ஷூட்டிங் போட்டொஷூட் இடையே இவரின் இந்த வளர்ச்சி பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.





