அவர் தான் என் அப்பா... பாண்டியராஜனிடம் பாசத்தை கொட்டிய அனிதா சம்பத்!

anitha hd
செய்தி வாசிப்பாளினியாக இருந்த அனிதா சம்பத் இளைஞர்களின் அழகு தேவதையாக பிரபலமாகி மனம் கவர்ந்தார். ஹீரோயின் ரேஞ்சுக்கு அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் உருவாகினர். அந்த சமயத்தில் பல யூடியூப் சேனல்கள் அவரை பேட்டி எடுக்க மளமளவென பிரபமானார்.

aniha sambath dp 2
அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு மக்கள் மனதில் ஆழமான இடத்தை பிடித்தார். அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் திரைப்பட வாய்ப்புகள் அவரை தேடி வர அதை சரியாக பயன்படுத்திக்கொண்டார்.
இந்நிலையில் சமீபத்தில் புதிய வீடு ஒன்றை வாங்கி குடிபுந்துள்ளார். அதில் தொடைக்காட்சி பிரபலங்கள் முதல் நண்பர்கள் வரை பலரும் கலந்துக்கொண்டார்கள். இந்நிலையில் நடிகர் பாண்டியராஜன் கலந்துக்கொண்டு அனிதாவையும் அவரது கணவரையும் ஆசீர்வதித்த போட்டோவை வெளியிட்டுள்ளார்.

aniha sambath dp
இதையும் படியுங்கள்: உன் எக்ஸ்பிரசன் அள்ளுது!.. க்யூட் பர்பாமன்ஸில் மனதை திருடிய திவ்யாபாரதி..(வீடியோ)
அந்த பதிவில், " தெய்வ மச்சான் படத்துல பாண்டியராஜ் சார் தான் எனக்கு அப்பா. உண்மையாகவே அவர் நடையும் புன்னகையும் சில பாவணைகளும் என் அப்பாவ அதிகமா நியாபகப்படுத்தும். சார் எங்க புது வீட்டுக்கு வந்தா,அப்பா உள்ள வரத பாக்குற மாதிரியே இருக்குமேனு நெனச்சேன். அப்படி தான் இருந்துச்சு. உங்க பிசி நாள்லயும் நேரம் ஒதுக்கி வந்ததுக்கு நன்றி சார்.

aniha sambath dp 1
நம்மள பெத்தவங்கலாம் கடைசி வரைக்கும் நம்ம கூடவே இருப்பாங்கனு நம்ம நெனக்கிறது தான் பெரிய தப்பு போல. அவங்களுக்கும் வயசு ஆகுது, அவங்களும் ஒருநாள் விட்டுட்டு போவாங்கனு புரிஞ்சா, இருக்கும் போதே இன்னும் நல்லா பாத்துக்கணும், நிறைய நேரம் செலவிடணும்னு இன்னும் சீரியஸா தோணும்." என தன் பாசத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.