திடீரென குழந்தையுடன் போஸ் கொடுத்த அனிதா சம்பத்.. ஷாக் ஆன ரசிகர்கள்....
ப்ரியா பவானி சங்கரை போலவே செய்தி வாசிப்பாளராக இருந்த போதே தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் அனிதா சம்பத். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களிடம் மேலும் பிரபலமானார்.
பிக்பாஸ் வீட்டில் எப்போதும் அழுது வடிந்து கிண்டலுக்கும் உள்ளானார். மேலும், கோபமான முகத்துடன் எப்போதும் மற்றவருடன் சண்டை போட்டுக் கொண்டே இருந்தார். பிரபாகரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில திரைப்படங்களில் செய்தியாளராகவே நடித்துள்ளார். தற்போது சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அனிதா சம்பத் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின், தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிடுவது, கணவருடன் எடுக்கப்பட்ட வீடியோக்களை வெளியிடுவது என ரசிகர்களை கவர்ந்து வருகிறார். மேலும், அவரின் யுடியூப் சேனலிலும் பல வீடியோக்களை அவர் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், திடீரென ஒரு குழந்தையுடன் போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். நீங்க ஷாக் ஆகாதீங்க!. அது அவரின் அண்ணன் குழந்தையாம். அந்த புகைப்படத்தை பகிர்ந்து ‘என் அம்மாவின் அம்மாயியை பார்த்திருக்கிறேன், பேசியிருக்கிறேன். அப்படியானால் எனக்கு பரீட்சையப்பட்டு ஐந்தாம் தலைமுறையின் முதல் குழந்தை ஆல்ட்ரின் (ஆல்ட்ரின்) என் அண்ணன் மகன்’ என நெகிழ்ந்துள்ளார்.