
Cinema News
நீ வறியாம்மா?.. ஒரே போன் போட்ட இயக்குனர்… ஓடி வந்த அஞ்சலி…
ஆந்திராவை சேர்ந்தவர் அஞ்சலி. ஆனால், இயக்குனர் ராம் இயக்கிய ‘கற்றது தமிழ்’ எம்.ஏ படத்தில் அறிமுகமானார்.
அதன்பின் பல திரைப்படங்களில் நடித்துவிட்டார். கலகலப்பு, அங்காடி தெரு, தூங்கா நகரம், மங்காத்தா, எங்கேயும் எப்போதும், இறைவி, தரமணி, பேரன்பு ஆகிய படங்கள் அவரின் நடிப்பில் ரசிகர்களை கவர்ந்த திரைப்படங்களாகும். ஒருபக்கம் தெலுங்கில் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இயக்குனர் ராம் தற்போது மலையாள நடிகர் நிவின்பாலியை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. இப்படத்தில் யாரை ஹீரோயினாக போடலாம் என யோசித்த ராமுக்கு அஞ்சலி ஞாபகம் வர அவருக்கு போன் போட்டு ‘நீ இந்த படத்துல நடிக்கிறியாம்மா?’ என கேட்டாரம்.
தன்னை அறிமுகம் செய்த இயக்குனராயிற்றே!.. நீங்கள் அழைக்கிறீர்கள். நான் வருகிறேன் என ஓடி வந்தாராம் அஞ்சலி. இத்தனைக்கும் எத்தனை நாள் படப்பிடிப்பு, என்ன சம்பளம், என்ன கதை என எதுவுமே கேட்கவில்லையாம் அஞ்சலி..
குருபக்தி என்றால் இதுதானா?..