போதைக்கு அடிமையான ஜெய்… டாட்டா காண்பித்து எஸ்கேப் ஆன அஞ்சலி… இப்படி எல்லாம் நடந்திருக்கா?

விஜய் நடிப்பில் வெளிவந்த “பகவதி” திரைப்படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்திருந்தார் ஜெய். இதுதான் அவரின் முதல் திரைப்படம். இதனை தொடர்ந்து ஜெய், “சென்னை 28”, திரைப்படத்தின் மூலம் மிக பிரபலமான நடிகராக அறியப்பட்டார்.

இத்திரைப்படத்தை தொடர்ந்து சசிக்குமார் இயக்கத்தில் ஜெய் நடித்த “சுப்ரமணியபுரம்” திரைப்படம் ஜெய்க்கு மிகப்பெரிய திருப்புமுனை வாய்ந்த திரைப்படமாக அமைந்தது. அதே போல் அவர் நடித்த “எங்கேயும் எப்போதும்” திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

“எங்கேயும் எப்போதும்” திரைப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக அஞ்சலி நடித்திருந்தார். ஜெய் கதாப்பாத்திரம் மிகவும் அப்பாவியான கதாப்பாத்திரமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். அதற்கு நேர்மாறாக அஞ்சலியின் கதாப்பாத்திரம் மிகவும் தைரியமான பெண் கதாப்பாத்திரமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். இருவருக்கும் இடையே இருந்த கெமிஸ்ட்ரி, அத்திரைப்படத்தில் மிகச் சிறப்பாக ஒர்க் அவுட் ஆகியிருந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட பயில்வான் ரங்கநாதன், இதுவரை யாரும் அறியாத ஒரு தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார். அதாவது ஜெய்யும் அஞ்சலியும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தார்களாம். தனியாக வீடு எடுத்து இருவரும் லிவிங் டுகதரில் ஒன்றாக வாழ்ந்து வந்தார்களாம்.

ஆனால் ஒரு கட்டத்தில் ஜெய், போதைக்கு அடிமையாகிவிட்டாராம். அவரின் போக்கு பிடிக்காத அஞ்சலி, அவரை பிரேக்கப் செய்துவிட்டாராம். ஒரு பேட்டியில் அஞ்சலி, “நான் ஒருவருடன் லிவிங்கில் இருந்தேன். ஆனால் இப்போது பிரிந்துவிட்டேன்” என்று ஜெய்யின் பெயரை குறிப்பிடாமல் கூறினாராம். இவ்வாறு பயில்வான் ரங்கந்தான் அப்பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

இதையும் படிங்க: தமன் உடம்புல இப்படி பிரச்சனை இருக்கா?!… இது என்ன புதுசா இருக்கு!

 

Related Articles

Next Story