நேத்து முளைச்ச காளானுக்கு இத்தனை கோடியா?.. எஸ்.ஜே.சூர்யா மீது காண்டான அஞ்சலி....
வாலி திரைப்படம் மூலம் இயக்குனரானவர் எஸ்.ஜே.சூர்யா.விஜயை வைத்து குஷி படத்தை இயக்கினார். அதன்பின் அவர் இயக்கிய படங்களில் அவரே ஹீரோவாக நடித்து வந்தார். பின்னர் மற்ற இயக்குனர்கள் படங்களிலும் ஹீரோவாக நடிக்க துவங்கினார்.
மெர்சல் படத்தில் வில்லனாக நடித்தார். மேலும், மாநாடு திரைப்படத்தில் அசத்தலான வில்லனாக நடித்து பாராட்டை பெற்றார். இப்படத்தால் அவரின் சம்பளமும் சில கோடிகள் உயர்ந்துள்ளது.
இந்நிலையில், பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் தெலுங்கி படத்தில் எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு அவருக்கு ரூ.6 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது. அதே படத்தில் நெகட்டிவ் வேடத்தில் நடிக்க நடிகை அஞ்சலி ஒப்பந்தமாகியுள்ளார். அவருக்கு ரூ.50 லட்சம் சம்பளம் பேசப்பட்டுள்ளது.
நாம் பல வருடங்களாய் நடித்து வருகிறோம். நம்முடைய சம்பளம் ஒரு கோடியை கூட தொடவில்லை. ஆனால், மாநாடு என்கிற ஒரே படத்தில் எஸ்.ஜே. சூர்யாவுக்கு ரூ.6 கோடி கொடுக்கிறார்களே என அஞ்சலியின் வயிறு எரிந்து வருகிறதாம்.
சினிமாவை பொறுத்தவரை ஜெயிக்குற குதிரை மீதுதான் பணம் கட்டுவார்கள் என்பது அஞ்சலிக்கு தெரியாதா என்ன!...