காமெடி நடிகருக்கு ஜோடியான அந்த நடிகை: அய்யோ நிமைமை இப்படி ஆயிருச்சே

by ராம் சுதன் |
anjali
X

இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான கற்றது தமிழ் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் தான் நடிகை அஞ்சலி. இப்படத்தை தொடர்ந்து அங்காடி தெரு, கலகலப்பு, எங்கேயும் எப்போதும் போன்ற பல வெற்றி படங்களில் அஞ்சலி நடித்துள்ளார்.

இருப்பினும் தமிழ் சினிமாவில் இவருக்கு சரியான பட வாய்ப்புகள் அமையாத காரணத்தால், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார். அதன் காரணமாக தற்போது பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து இயக்குனர் சங்கர் இயக்கி வரும் தெலுங்கு படத்தில் அஞ்சலி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதுதவிர தமிழில் அஞ்சலியின் ஆஸ்தான இயக்குனரான ராம் மலலயாள நடிகர் நிவின் பாலியை வைத்து இயக்கி வரும் புதிய படம் ஒன்றிலும், பூச்சாண்டி என்ற படத்திலும் அஞ்சலி நாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் காமெடி நடிகர் ஒருவருக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

anjali

anjali

அதன்படி, மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற நாயட்டு என்ற படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளதாம். இந்த படத்தில் தெலுங்கு சினிமாவில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் பிரியதர்ஷி என்பவர் நாயகனாக நடிக்க உள்ளாராம்.

இயக்குனர் கருணா குமார் இயக்கும் இந்த படத்தில் தான் நடிகை அஞ்சலி நாயகியாக நடிக்க உள்ளாராம். ஓரளவிற்கு பட வாய்ப்புகள் கைவசம் இருக்கும் நிலையில் காமெடி நடிகருக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்க முடிவு செய்துள்ளதால் அவரது மார்க்கெட் குறைய வாய்ப்பிருப்பதாக சினிமா வட்டாரங்களில் கிசு கிசுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அஞ்சலி இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட காரணம் தெரியவில்லை

Next Story