Categories: Entertainment News

பாலகிருஷ்ணாவை வச்சு பப்ளிசிட்டி பண்ணியும் படம் ஓடலையே!.. மறுபடியும் பழைய தொழிலை கையிலெடுத்த அஞ்சலி!

விஷ்வக் சென் மற்றும் அஞ்சலி நடிப்பில் இந்த வாரம் வெளியான கேங்ஸ் ஆஃப் கோதாவரி திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் ஃபிளாப் ஆகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில், பாலகிருஷ்ணாவை வைத்து பெரிய அளவில் பப்ளிசிட்டி செய்திருந்தனர்.

அஞ்சலியை பாலகிருஷ்ணா தள்ளிவிடும் வீடியோவையே படக்குழுவினர் தான் சோசியல் மீடியாவில் ஷேர் செய்து நெகட்டிவ் பப்ளிசிட்டி செய்ததாகவும் பேச்சுக்கள் அடிபடத் தொடங்கியுள்ளன.

இதையும் படிங்க: சூப்பர் ஹிட் அடித்த சூரியின் கருடன்!.. சந்தானத்தை கழுவி ஊற்றும் ஃபேன்ஸ்.. வேறலெவல் மீம் பாருங்கோ!..

ஆனால், எந்த ஒரு முயற்சியும் விஸ்வக் சென் மற்றும் அஞ்சலி நடித்த கேங்ஸ் ஆப் கோதாவரி திரைப்படத்தை காப்பாற்றவில்லை எனக் கூறுகின்றனர். பெரிய பட்ஜெட்டில் உருவான அந்த படம் முதல் நாளில் குறைவான வசூலையே பெற்றிருப்பதாகவும் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ள நிலையில் மேலும் வசூல் பாதிக்கும் எனவும் கூறுகின்றனர்.

மீண்டும் நடிகை அஞ்சலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேலையை கவர்ச்சியாக அணிந்து கொண்டு விதவிதமான போட்டோக்களை எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களுக்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகின்றன.

இதையும் படிங்க: டிரான்ஃபர்மேஷனா இப்படி இருக்கனும்டா! இந்தியன் – இந்தியன்2 அனிருத்தின் வளர்ச்சி.. வைரலாகும் புகைப்படம்

ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி மற்றும் அஞ்சலி நடித்த ஏழுகடல் ஏழுமலை திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் மாதமே அந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜூன் மாதம் ஆகியும் இன்னும் படத்தின் ரிலீஸை படக்குழுவினர் அறிவிக்கவில்லை.

கிடைக்கும் படங்களில் தேர்ந்த நடிப்பை அஞ்சலி வெளிப்படுத்தி வந்தாலும், அவருக்கு முன்பை போல படங்கள் பெரிதாக ஓடுவதில்லை என்பது அவரது ரசிகர்களை வருத்தமடைய செய்துள்ளது.

இதையும் படிங்க: இந்த படம் குப்பை.. பைசா கூட தேறாது!.. சத்யராஜின் முகத்துக்கு நேராக சொன்ன தயாரிப்பாளர்…

Published by
Saranya M