ஜெய்யும் நானும் காதலித்தோமா? இப்படி சொல்லிட்டாரே அஞ்சலி
தேசிய விருது இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான கற்றது தமிழ் படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை அஞ்சலி. முதல் படத்திலேயே தனது எதார்த்தமான நடிப்பு மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த அஞ்சலி பக்கத்து வீட்டு பெண் போன்று தோற்றம் கொண்டதால் அனைவருக்கும் பிடித்த நாயகியாகி விட்டார்.
தற்போது ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் இயக்குனர் ராம் இயக்கத்தில் நடித்து வரும் அஞ்சலி சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர் நடிகர் ஜெய் உடனான காதல் குறித்தும், தனது ஆஸ்தான இயக்குனர் ராம் குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
அதன்படி அவர் கூறியதாவது, "நான் ஜெய்யை காதலிப்பதாக கூறினார்கள். பின்னர் அவர்களே அப்படி எழுதுவதை நிறுத்தி விட்டார்கள். இந்த மாதிரியான வதந்திகளுக்கு நான் எப்போதுமே ரியாக்ட் பண்ண மாட்டேன். நடிக்க வந்த ஆரம்பத்தில் தான் இது மாதிரியான வதந்திளுக்காக ஒரு மணி நேரம் ஒதுக்கி அழுதுள்ளேன்.
யாரை பார்த்தாலும் அதை பற்றி பேசுவேன். ஆனால் இப்போது அந்த மாதிரியான செய்திகள் வரும் பொழுது, உண்மையாக இருந்தால் எப்படி அவங்களுக்கு தெரியும்னு யோசிப்பேன். நான் பண்ணாத ஒன்ன எழுதியிருந்தால், ஒரு வேளை எனக்கு திருமணம் ஆகிவிட்டதுனு எழுதியிருந்தால் அடப்பாவிங்களா என்னை கூப்பிடவே இல்லைனு தோணும்.
ராம் சார் எப்போதெல்லாம் என்னை நடிக்க அழைப்பு விடுக்கிறாரோ அப்போதெல்லாம் அது என்ன கதாபாத்திரமாக இருந்தாலும் நான் நடிப்பேன். ஏனென்றால் அது நான் அவர் மீது வைத்திருக்கும் மரியாதை. அவர் தான் என்னை அறிமுகப்படுத்தினார். அவரை நான் அப்பா மாதிரிதான் பார்க்குறேன். அதனால் அவர் படம் எடுக்குறாருனா நான் ரொம்ப ஜாலியா இருப்பேன்" என பல விஷயங்களை அஞ்சலி மனம் திறந்து மிகவும் வெளிப்படையாக பேசியுள்ளார்.