உன் புருஷன் பீல்டவுட் நீ ஹீரோயின் ஆகி சோறு போடலாம்ல – பொறுமை இழந்த சந்திரன் போலீசில் புகார்!

Published on: September 23, 2021
dp-3
---Advertisement---

அஞ்சனா கணவரை அசிங்கப்படுத்திய இணையவாசி!

பிரபல தொகுப்பாளினியாக அஞ்சனா கயல் படத்தின் ஹீரோவான சந்திரனை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பிறகு பெண்களுக்கு தான் மார்க்கெட் இழந்து சினிமா வாய்ப்புகளே கிடைக்காமல் பீல்டு அவுட் ஆகிவிடுவார்கள். ஆனால், அஞ்சனா விஷயத்தில் அப்படி இல்லை. அவர் குழந்தை பிறப்புக்கு தாமாகவே முடிவெடுத்து தான் கேப் விட்டிருந்தார்.

பிரசவத்திற்கு பின்னர் மீண்டும் உடல் எடையை குறைத்து டிவி நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவதில் பிசியாக வலம் வரத்துவங்கினார். ஆனால், மௌலி சந்திரன் விஷயத்தில் அப்படியே உல்டாவாக நடக்கிறது. வாய்ப்பு கிடைக்காமல் அவர் சினிமாவில் இருந்தே பீல்டு அவுட் ஆகிவிட்டார்.

dp-4
Anjana

இதனை பல இணையவாசிகள் ட்ரோல் செய்துள்ளனர். அந்த வகையில் நபர் ஒருவர், உன் புருஷனுக்கு தான் பீல்டு அவுட் ஆகிடுச்சே நீ ஹீரோயின் ஆகினால் அவருக்கு உதவியாக இருக்கும்ல என கேட்டு கமெண்ட் அடித்துள்ளார். இதனால் கடுப்பான சந்திரன், இந்த நபர் பல போலியான அக்கவுண்ட்களை வைத்து தொடர்ந்து இப்படி மோசமான கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகிறார் என கூறி சென்னை போலீசுக்கும் டேக் செய்துள்ளார். இதே போன்று அர்ச்சனாவும், உனக்கு வேல வெட்டி இருந்தா நீ போயி பாரு உன்ன பெத்துக்கு உங்கம்மா ரொம்ப சந்தோஷாடுவாங்க என கூறி கடுமையாக திட்டியுள்ளார்.

பிரஜன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment