மாஸ்டர் பட வசூலை தாண்டுமா அண்ணாத்த?!... பரபர அப்டேட்...
நடிகர் ரஜினிக்கு கடைசியாக வெளியான பேட்ட, தர்பார் என 2 படங்களுமே பெரிய வெற்றியை பெறவில்லை. பேட்ட படம் ரசிகர்களை கவர்ந்தாலும் அப்படத்திற்கு போட்டியாக வெளியான விஸ்வாசம் படம் பேட்டை படத்தின் வசூலை பாதித்தது. தர்பார் திரைப்படம் ரசிகர்களை கவரவில்லை.
எனவே, எப்படியாவது ஒரு வெற்றியை கொடுக்க வேண்டும் என சிவாவுடன் கை கோர்த்தார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளியானது. இப்படம் தீவிர ரஜினி ரசிகர்களையே கவரவில்லை என ஒரு பக்கம் எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும், படம் நல்ல வசூலை பெற்று வருகிறது.
போட்டிக்கு பெரிதாக படங்கள் இல்லாத நிலையில் அண்ணாத்த படம் வசூலில் சக்கை போடு போடுகிறது. தமிழகத்தில் அண்ணாத்த திரைப்படம் வெளியாகி 2 நாளில் இப்படம் ரூ.35 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிகிறது. மற்றபடி 100 கோடி வசூல் செய்துவிட்டது என வெளியான செய்திகள் எல்லாம் பொய் எனக்கூறப்படுகிறது. ஆனாலும், 2 நாள் வசூல் என்பது மாஸ்டரின் 2 நாள் வசூலை விட அதிகம் என தெரியவந்துள்ளது. மாஸ்டர் படம் முதல் நாள் வசூலை விட அண்ணாத்த படம் அதிகமாக வசூல் செய்துள்ளது.
கொரோனா முடிந்து தியேட்டர் திறக்கப்பட்டு அதுவும் 50 சதவீத இருக்கை மட்டுமே அனுமதி என்பது மாறி 100 சதவீம் அனுமதி அளிக்கப்பட்ட பின் முதலில் வெளியான திரைப்படமாக அண்ணாத்த படம் இருக்கிறது. அதோடு, 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் குடும்பத்துடன் பலரும் சென்று இப்படத்தை பார்த்து வருகின்றனர்.
ஆனால், மாஸ்டர் படமே அதிக வசூல் என விஜய் ரசிகர்களும், கர்ணன் படமே அதிக வசூல் என தனுஷ் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் களம் இறங்கியுள்ளனர். இன்னும் சில நாட்களில் அண்ணாத்த படம் வசூல் என்ன? மாஸ்டர் பட வசூலை தாண்டிவிட்டதா? என்பது தெரிந்துவிடும்.