அண்ணாத்த படம் ரூ.200 கோடி வசூலா? - உண்மை நிலவரம் என்ன?...

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 4ம் தேதி வெளியான திரைப்படம் அண்ணாத்த. எதிர்மறையான விமர்சனங்களை பெற்றாலும் இப்படம் நல்ல வசூலை ஈட்டி வந்தது. வெளியான அனைத்து தியேட்டர்களிலும் குடும்பம் குடும்பமாக சென்று இப்படத்தை பார்த்து வந்தனர்.

ஆனால், இப்படத்தின் வசூலுக்கு எதிராக மழை வந்தது. கடந்த சனிக்கிழமை முதலே தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, கடலூர், கன்னியாகுமாரி, நாகப்பட்டினம், திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற கடலோர மாவாட்டங்கள் கனமழை பெய்தது. அதிலும், தியேட்டர்களில் அதிக வசூலை குவிக்கும் மாவட்டமான சென்னையில் 5 நாட்களுக்கும் மேல் கனமழை பெய்து வருகிறது. எனவே, சென்னையின் பல பகுதிகள் மழை நீரில் தேங்கியது.

annaatthe review

எனவே, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் மக்கள் தியேட்டர் பக்கம் செல்லவில்லை. எனவே, கடந்த சனிக்கிழமை முதலே அண்ணாத்த படத்தின் வசூல் கடுமையாக பாதித்துள்ளது. பல ஊர்களில் காட்சியையே ரத்து செய்யும் நிலை ஏற்பட்டது. எனவே, வசூல் பற்றி இப்படத்தை தயாரித்த சன்பிக்சர்ஸ், தியேட்டர் அதிபர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் போட்ட கணக்கு தவறிவிட்டது.

ஆனால், ட்ரேக்கர்ஸ் என்கிற பெயரில் அண்ணாத்த படம் ரூ.200 கோடி வசூல் செய்துவிட்டது என பொய்யாக செய்திகளை பதிவிட்டு வருகின்றனர். ஆனால், இப்படம் ரூ.100 கோடியை கூட இன்னும் வசூல் செய்யவில்லை என உண்மை அறிந்த சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

annaatthe

படம் ரிலீஸான அன்று தீபாவளி மற்றும் ரஜினி ரசிகர்கள் என முதல் நாள் நல்ல வசூல் இருந்தது. அதிக பட்ச டிக்கெட் விலை என்பது முதல் நாளோடு முடிந்துவிட்டது. அதிலும் ரசிகர் மன்ற காட்சிக்காக அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்கி விற்க திட்டமிட்டவர்கள் பலரும் நஷ்டம் அடைந்தனர். அடுத்தடுத்த நாட்களில் சென்னை போன்ற பெருநகரங்களை தவிர மற்ற ஊர்களில் தியேட்டர்களில் 50 சதவீத டிக்கெட் விற்பதே போராட்டமாக இருந்துள்ளது.

முதல்நாள் தமிழகத்தில் மட்டும் ரூ.11 கோடி வசூலானது. அடுத்த நாள் 25 கோடி வசூலானதாக கூறப்படுகிறது. ஆனால், சனிக்கிழமை மழை துவங்கியதும் வசூல் குறைய துவங்கியது. மழையில் தியேட்டர் பக்கம் மக்கள் வரவில்லை.

சனிக்கிழமை முதல் நேற்று அதாவது வெள்ளிக்கிழமை வரை தியேட்டர் பக்கம் மக்கள் செல்லவில்லை. அதிலும், சென்னையில் 90 சதவீத தியேட்டர்களில் காட்சிகள் ரத்ட்து செய்யப்பட்டுவிட்டது. மீண்டும் தியேட்டர் பக்கம் மக்கள் வர இன்னும் ஒரு வாரம் ஆகும்.

மொத்தத்தில் அண்ணாத்த படம் ரூ. 100 கோடி வசூலை கூட தொடவில்லை என்பதுதான் தற்போதைய நிஜம்...

 

Related Articles

Next Story