வேற லெவல் சாதனை படைத்த அண்ணாத்த படம்.... மகிழ்ச்சியில் தியேட்டர் உரிமையாளர்கள்...

by ராம் சுதன் |
annaatthe
X

annaatthe

இன்னைக்கு சோசியல் மீடியால டாப் டிரெண்டிங்ல இருக்கற விஷயம் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படம் தான். நாளைக்கு அதாவது நவம்பர் 4 தீபாவளிய முன்னிட்டு சிவா இயக்கத்தில ரஜினி நடிப்பில உருவாகி இருக்குற அண்ணாத்த படம் உலகம் முழுவதும் தியேட்டர்ல வெளியாக இருக்கு.

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ரஜினிய பெரிய ஸ்கிரீன்ல பார்க்கப்போற சந்தோசத்துல ரஜினி ரசிகர்கள் இருக்காங்க. அதுமட்டுமில்லாம படத்துல நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு பலர் நடிச்சிருக்காங்க. சமீபத்தில இந்த படத்தோட டிரைலர், டீசர், பாடல் என வெளியாகி வரவேற்பை பெற்றது.

annathe

என்னதான் வரவேற்பு கிடைச்சாலும் மற்றொருபுறம் விமர்சனங்களும் எழுந்தன. அண்ணாத்த படத்தின் டிரைலரை பார்த்த பலர் விஸ்வாசம் படத்தின் இரண்டாம் பாகம் போல இருப்பதாக விமர்சனம் செய்து வந்தனர். இருப்பினும் விமர்சனங்களை தாண்டி படத்தின் டிரைலர் மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது.

அதேபோல் படத்திற்கான முன்பதிவின் போதும் அனைத்து தியேட்டர்களும் சில மணி நேரங்களிலேயே ஹவுஸ்புல் ஆனதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அண்ணாத்த படம் வேறு சாதனையை சத்தமில்லாமல் செய்துள்ளதாம். அதுகுறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

rajini-nayanthara

rajini-nayanthara

அதன்படி அண்ணாத்த படம் நாளை இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்தியா தவிர வெளிநாடுகளில் மட்டும் சுமார் 1100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் அண்ணாத்த படம் வெளியாக உள்ளதாம். இதன் மூலம் வெளிநாட்டில் அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் தமிழ்ப் படம் என்ற சாதனையை அண்ணாத்த படம் புரிந்துள்ளது.

இதுவரை எந்தவொரு தமிழ் படமும் வெளிநாடுகளில் இத்தனை தியேட்டர்களில் வெளியானது இல்லையாம். அண்ணாத்த படம் தான் முதல் முறை இத்தனை தியேட்டரில் வெளியாக உள்ளது.
இதனால் திரையரங்க உரிமையாளர்கள் பலரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

Next Story