பிச்சைக்காரன கூட முந்தலயே!.. இது என்னடா ‘அண்ணாத்த’வுக்கு வந்த சோதனை....
பொதுவாக புதுவருடம், தீபாவளி, பொங்கல் என முக்கிய பண்டிகை என்றாலே தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு புதிய திரைப்படங்களை ஒளிபரப்பி தங்களின் டி.ஆர்.பியை அதிகரிப்பார்கள். சில சமயம் அவர்களின் கணக்கு தவறியும் போகும்.
சன் டிவியை பொறுத்தவரை காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3, விஸ்வாசம், பிச்சைக்காரன் ஆகிய படங்கள் எப்போது ஒளிபரப்பினாலும் அதிக டி.ஆர்.பியை பெற்று வருகிறது.
கடந்த வாரம் பொங்கலன்று சன் டிவியில் அண்ணாத்த திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது. அதை வைத்து டி.ஆர்.பியை ஏத்தலாம் என சன் டிவி கணக்கு போட்டது. ஆனால், அது நடக்கவில்லை என்பதே நிஜம்.
இதையும் படிங்க: இப்படி நீ ஜாக்கிங் போனா ஹார்ட் பீட் எகிறிடும்!… புலம்ப வைத்த சந்தானம் பட நடிகை ….
அண்ணாத்த படத்திற்கு கிடைத்த டி.ஆர்.பி விஸ்வாசம் மற்றும் பிச்சைக்காரன் ஆகிய படங்களின் டி.ஆர்.பி ரேட்டிங்கை விட குறைவாகவே உள்ளது. விஸ்வாசம் படம் 18.14 புள்ளிகளுடன் முதலிடத்திலும், பிச்சைக்காரன் படம் 17.69 புள்ளிகள் பெற்று 2ம் இடத்தில் இருக்க, அண்ணாத்த படத்திற்கு 17.37 புள்ளிகள் மட்டுமே கிடைத்தது.
அண்ணாத்த படம் வெளியான போது படம் நன்றாக இல்லை என்கிற எதிர்மறையான விமர்சனம் பெற்றதால், இப்படத்தை டிவியில் பார்க்க பலரும் ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.