More
Categories: Cinema News latest news

தல மிஸ் ஆகி தலைவர் மாட்டிக்கிட்டார்!.. ரசிகர்களை கதறவிட்ட அண்ணாத்த…

அஜித்தை வைத்து விஸ்வாசம் என சூப்பர் ஹிட் கொடுத்த சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்க ஆசைப்பட்டார். அதன் விளைவாக சன் பிக்சர்ஸ் தயாரிக்க அண்ணாத்த படம் உருவானது. இப்படம் நேற்று வெளியானது. சிவாவுடன் ரஜினி இணைந்ததால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எகிறியது.

ஆனால், நேற்று படம் பார்த்த பலரும் படம் சரியில்லை என்றே கருத்து தெரிவித்தனர். ரஜினியின் தீவிர ரசிகர்களை கூட இப்படம் கவரவில்லை என்பதுதான் நிதர்சனம். ரஜினிக்காக படம் பார்க்க வந்த பலரும் ஏமாந்து போனார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் இதுதான்..

Advertising
Advertising

சிவா ரஜினியை சரியாக பயன்படுத்தவில்லை..

ரஜினிக்கு ஏற்ற திரைக்கதையை சிவா உருவாக்கவில்லை.

படத்தில் எந்த கதாபாத்திரத்திலும் அழுத்தமும், சுவாரஸ்யமும் இல்லை..

படத்தில் காமெடியே இல்லை..

ரஜினியை வீணடித்துவிட்டார் சிவா..

சீரியல் போல் படம் இருக்கிறது.. ஒரே அழுகாச்சி…பெண்களுக்கு பிடிக்கும்…

சிவா ஏற்கனவே இயக்கிய வேதாளம், விஸ்வாசம். வீரம் ஆகிய படங்களை மீண்டும் பார்த்தது போலவே இருக்கிறது.

இடைவேளைக்கு பின் தியேட்டரில் பலரும் தூங்கி விட்டனர்…

என படத்திற்கு எதிராக ரஜினி ரசிகர்களே கூறும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது.

கொரோனா காரணமாக ஏறக்குறைய 2 வருடங்களாக படப்பிடிப்பில் இருந்தது அண்ணாத்த. எனவே, பார்த்து பார்த்து காட்சிகளை இளைத்திருக்கலாம். ஆனால், சிவா அதை செய்ய தவறிவிட்டார். ரஜினி படத்திற்கு இது போதும் என நினைத்துவிட்டாரா என தெரியவில்லை.

படம் பார்க்கும் போது வலி ஏற்பட்டு அழுதா அது ‘ஜெய்பீம்’. படம் பார்த்துட்டு வெளிய வந்து அழுதா அது ‘அண்ணாத்த’, தல மிஸ் ஆகி தலைவர் மாட்டிக்கிட்டார் என்றெல்லாம் படத்தை பார்த்தவர்கள் கிண்டலடித்து வருகிறார்கள்.

மொத்தத்தில் அண்ணாத்த படத்தில் கதை, திரைக்கதை இரண்டுமே ரசிகர்களை கவரவில்லை. படத்தில் நகைச்சுவை காட்சிகள் இல்லை. ரஜினிக்கான மாஸ் சீன்கள் இல்லை. ஓவர் செண்டிமெண்ட் வைத்து சீரியல் போல இருக்கிறது என பலரும் கூறுவதை பார்க்க முடிகிறது.

Published by
சிவா

Recent Posts