Categories: latest news

சாரே இது கொல மாஸு… வெளியான ‘அண்ணாத்த’ பட பாடல் வீடியோ…

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படம் வருகிற தீபாவளி அதாவது நவம்பர் 4ம் தேதி வெளியாகிறது என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது.

Also Read

இப்படத்தில் ரஜினியின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும், குஷ்பு, நயன்தாரா, மீனா, சூரி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் ரஜினி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற ரஜினியின் அறிமுகப்பாடல் ‘அண்ணாத்த அண்ணாத்த’ வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இப்பாடலை ரஜினியின் பல அறிமுகப்பாடலை பாடிய மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார். இப்பாடல் மிகவும் துள்ளலாக உருவாகியுள்ளது.

Published by
சிவா