சரவெடி வெடிக்கும் அண்ணாத்த - பக்கா மாஸ் டிரெய்லர் வீடியோ..

by சிவா |
annaatthe
X

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் அண்ணாத்த. இப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும்,குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.

இந்த படத்தில் ரஜினி கிராமத்து ஆளாக நடித்து பட்டைய கிளப்பியுள்ளார். சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான விஸ்வாசம் திரைப்படம் போல் இப்படமும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

annaatthe

இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. கிராமத்து ஊர் தலைவராக ரஜினி நடித்துள்ளார். தங்கை கீர்த்தி சுரேஷ் உடனான செண்டிமெண்ட் மற்றும் காமெடி காட்சிகளும், வில்லன்களுக்கு ரஜினி சவால் விடும் காட்சிகளும் இந்த டிரெய்லர் வீடியோவில் இடம் பெற்றுள்ளது.

விஸ்வாசம் படத்தில் வில்லனாக நடித்த ஜகபதி பாபுவும், பல படங்களில் வில்லனாக நடித்த அபிமன்யூ சிங்கும் இப்படத்தில் முக்கிய வில்லன்களாக நடித்துள்ளனர்.

Next Story