எப்பவும் நான் கெத்து...மத்ததெல்லாம் வெத்து....மீண்டும் நிரூபித்த அண்ணாத்த!...

by சிவா |   ( Updated:2021-11-06 01:03:51  )
rajini
X

விஸ்வாசம் பட இயகுனர் சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் தீபாவளியை முன்னிட்டு கடந்த 4ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சிவாவுடன் ரஜினி இணைந்ததால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எகிறியது.

ஆனால், படம் பார்த்த பலரும் படம் சரியில்லை என்றே கருத்து தெரிவித்தனர். ரஜினியின் தீவிர ரசிகர்களை கூட இப்படம் கவரவில்லை என்பதுதான் நிதர்சனம். ரஜினிக்காக படம் பார்க்க வந்த பலரும் ஏமாந்து போனார்கள். அதேநேரம் குடும்ப செண்டிமெண்ட் படங்களை விரும்பும் சில ஆண்களுக்கும், பெண்களுக்கும் இப்படம் பிடித்துள்ளது.

rajini

அதேநேரம், போட்டிக்கு பெரிதாக படங்கள் இல்லாத நிலையில் அண்ணாத்த படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. தமிழகத்தில் முதல் நாளில் 11 கோடியும், உலகம் முழுவதும் சேர்த்து இப்படம் ரூ.34.92 கோடியை வசூல் செய்தது. அதேபோல், 2ம் நாள் நாளில் அதாவது 5ம் தேதியான நேற்று இப்படம் தமிழகத்தில் ரூ.27.15 கோடி என 2 நாட்களில் மொத்தம் ரூ.62.07 கோடியும் வசூல் செய்துள்ளது. உலக அளவில் இதுவரை ரூ.112.86 கோடியை இப்படம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதால் அண்ணாத்த படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story